இளம் வயதில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்த இயக்குநர் அட்லீ, ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியிருக்கிறார். அவர் மட்டும் இன்றி ,அவருடன் தமிழ்ப் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகளையும் பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில் மிக பிரமாண்டமான திரைப்பட்மாக உருவான ‘ஜவான்’ கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது.
படம் வெளியாவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் அட்லீ, ‘ஜவான்’ படம் மிகப்பெரிய வசூல் சாதனை படமாக அமைவதோடு, ஷாருக்கானுக்கு மற்றொரு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும், என்றார். அவர் சொன்னது போல் பாலிவுட், கோலிவுட், டாலிவுட் என மூன்று சினிமாவிலும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக படத்தில் இடம்பெறும் அரசியல் வசனங்கள் மற்றும் அதைச் சார்ந்த காட்சிகளை மக்கள் கொண்டாடுகிறார்கள். இதனால், படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, நிச்சயம் ரூ.1000 கோடியை படம் வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘ஜவான்’ படத்தின் முதல் நாள் வசூலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, படம் வெளியான முதல் நாளில் ரூ.129.6 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸில் ஷாருக்கான் மீண்டும் கால் பதித்துள்ளார்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...