‘நிபுணன்’ படடத்தை தொடர்ந்து தமிழிலும் பிஸியாகியுள்ள வரலட்சுமி சரத்குமார், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமான ‘சக்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக முன்னணி ஹீரோ ஒருவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, கெளதம் கார்த்திக் - கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்தில், முக்கிய வேடம் ஒன்றுக்காக வரலட்சுமி ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த வேடம் ஹீரோவுக்கு இணையான வேடமாம். இப்படத்தில் ஹீரோயினாக ரெஜினா கஸண்ட்ரா நடிக்கிறார். காமெடி வேடத்தில் சதீஷ் நடிக்கிறார்.
இந்த படத்துடன் மேலும் சில படங்களிலும் நடிப்பது குறித்து வரலட்சுமி பேச்சு வார்த்தை நடத்தி வருவதுடன், கதை சொல்ல பல இயக்குநர்கள் வரிசை கட்டியும் நிற்கிறார்களாம்.
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானாலும், போதிய வாய்ப்பு இல்லாமல் இருந்த வரலட்சுமிக்கு தற்போது தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வருவதால் ரொம்ப குஷியடைந்துள்ளாராம்.
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...