தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான அட்லீ, தனது மாஸான இயக்கம் மூலம் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த நிலையில், தனது அறிமுகப் படத்திலேயே பாலிவுட் சினிமாவை மிரள வைத்துள்ளார்.
ஷாருக்கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியான ‘ஜவான்’ திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்தி சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.
குறிப்பாக, படத்தில் இடம்பெறும் அரசியல் சம்மந்தமான காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு இந்தியா முழுவதிலும் வரவேற்பு கிடைத்திருப்பதால் படம் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து புதிய வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.
‘ஜவான்’ படம் வெளியாகி மூன்றாவது நாளான கடந்த சனிக்கிழமை, செப்டம்பர் 9 ஆம் தேதி, இந்திய திரையுலக வரலாற்றில் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரே நாளில் இந்திப் பதிப்பு 68.72 கோடி ரூபாயையும், உலகளவில் 144.22 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளது. எந்த ஒரு இந்திய திரைப்படமும் இதற்கு முன்பு இத்தகைய வசூல் சாதனையை நிகழ்த்தியதில்லை என்பது குறிப்பிடதக்கது.
தென்னிந்திய திரைத்துறையிலிருந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பங்குபெற்றதோடு, தென்னிந்தியாவின் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்றிருப்பதால், தென்னிந்தியாவிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.
உலகம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஜவான் திரைப்படம் வசூலில் இன்னும் மிகப்பெரிய சாதனைகள் படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...