வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சூரி, தற்போது ‘விடுதலை 2’ படப்பிடிப்பை முடித்த கையோடு, மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதில் சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். நாயகிகளாக ரேவதி சர்மா, ஷிவதா நாயர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியிருக்கும் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து துரை செந்தில்குமார் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஈ.ராகவ படத்தொகுப்பு செய்ய, ஜி.துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
மல்டி ஸ்டார் ஆக்ஷன் ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி நிறுவனங்கள் சார்பில் கே.குமார் தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் கும்பகோணத்தில் நடைபெற்றது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...