இயக்குநர் கே.வி.நந்தா இயக்கத்தில், விமல் - சூரி இணைந்து நடிக்கும் படம் ‘படவா’. இதில் ஸ்ரீதா கதாநாயகியாக நடித்திருக்கிறார். கே.ஜி.எப் ராம் வில்லனாக நடித்திருக்கிறார். தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி, சாம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன் 40-க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு இசையமைக்கும் ஜான் பீட்டர் ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்ய, வினோத் கண்ணா படத்தொகுப்பு செய்துள்ளார். சரவண அபிராமன் கலை இயக்குநராக பணியாற்ற, சிறுத்தை கணேஷ் ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியுள்ளார். தினேஷ், ஸ்ரீதர், தினா ஆகியோர் நடனக் காட்சிகளை வடிவமைக்க, ஜான் பீட்டர், விவேகா, கபிலன் வைரமுத்து, இளையகம்பன், ஸ்வர்ணலதா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
வெளியீட்டுக்கு தயாராகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். மேலும், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி, “ஜான் பீட்டர் மற்றும் கதாநாயகன் விமல் அவர்களுக்கு வணக்கம். கண்டிப்பாக நீங்கள் பெரிய உயரத்தை தொடுவீர்கள். கதாநாயகன் விமல் நடிகர் சூரி சார் காம்போ நன்றாக இருக்கும். இது நல்ல திரைப்படமாக கட்டாயம் அமையும்.” என்றார்.
படத்தின் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான ஜான் பீட்டர் பேசுகையில், “அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்தப் படத்தில் சூரி சார் பெரிய கேரக்டர் செய்துள்ளார். அவர் சார்பாகவும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. அனைவரையும் வாழ்த்த வரவேற்கிறேன்” என்றார்.
கதாநாயகன் விமல் பேசுகையில், “மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தின் இயக்குநர் நந்தா அவர்களுக்கும் நன்றி. அன்பு நண்பன் சூரி அவர்களுக்கும், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்களுக்கும் நன்றி.” என்றார்.
கதாநாயகி ஸ்ரீதா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம்,. மேடையில் உள்ள அனைவருக்கும் நன்றி. இயக்குநர் நந்தா அவர்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எனக்கு சுத்தமாக தமிழ் தெரியாது. அவரால் தான் நான் தமிழ் வசனம் பேசி கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
கவிஞர் இளையகம்பன் பேசுகையில், “'படவா' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். என் அருமை இசையமைப்பாளர் ஜான் பீட்டர் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். அவரது பெரிய முயற்சியில் உருவாகின்ற 'படவா' திரைப்படம் ஒரு அற்புதமான திரை சூழலை உருவாக்கி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. இந்த திரைப்படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. அனைத்து பாடல்களையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்த திரைப்படத்தின் முகப்புப் பாடலை நான் எழுதியிருக்கின்றேன். பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக அமைந்திருக்கின்றன. அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.
கலை இயக்குநர் சரவண அபிராமன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், படவா திரைப்படத்தில் நவரசங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த படத்திற்கு இசையமைப்பாளரும் தயாரிப்பாளரும் ஜான் பீட்டர் அவர்கள் தான். விமல் மிகப்பெரிய நடிகர், இந்த திரைப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும், சூரி அவர்களுக்கும் இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்” என்றார்.
ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் பேசுகையில், “இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த படம் மிகவும் நன்றாக உருவாகி உள்ளது. என் உடனிருந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
இயக்குநர் சரவணன் சக்தி பேசுகையில், “இது மிகப்பெரிய சமூக பொறுப்புள்ள படம். விவசாயம் பற்றி இது பேசுகிறது. இந்த திரைப்படத்தை பொறுத்தவரை அனைவரும் சிறப்பான பங்களித்துள்ளனர். நானும் இந்த படத்தில் ஒரு ரோல் செய்துள்ளேன். படம் மிகப்பெரிய வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.
நடிகர் சவுந்திரராஜா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் நான் நான் நடிக்காவிட்டாலும் விமலுக்காக வந்திருக்கிறேன். விவசாயம் குறித்த கருத்து இதில் இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக நன்றாக ஓட வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அனைவருக்கும் வணக்கம்” என்றார்.
பாடகர் வேல்முருகன் பேசுகையில், “இந்த திரைப்படத்தில் டைட்டில் பாடலை நான் பாடியிருக்கிறேன். 'படவா' மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும், மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. அனைவருடனும் சினிமாவில் பயணிப்பது மிகவும் மகிழ்ச்சி” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ஜான் பீட்டர் இப்படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி இசையமைப்பாளரும் தான். பாடல்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அருமையாக இருக்கிறது. நடிகர் விமல் வெற்றி அடைந்துக்கொண்டே இருக்க வேண்டும். 'படவா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த திரைப்படம் விவசாயத்தை பற்றியது. 'கடைசி விவசாயி' தேசிய விருது பெற்றது, டிரைலரை பார்க்கும் போது அது போன்ற திரைப்படமாக தான் 'படவா' இருக்கும் என்று தோன்றுகிறது.” என்றார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன் பேசுகையில், “'படவா' திரைப்படம் தயாரிப்பாளர் ஜான் பீட்டருக்கு பெரிய வெற்றியை கொடுக்கும், விமல் அவர்களுக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...