கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க பல நடிகர்கள் ஆர்வம் காட்டி வந்த நிலையில், நடிகர் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமை அப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், அப்படத்தை இயக்க போகும் இயக்குநர் யார்? என்பதை இன்று மாலை அறிவிக்கப்படும் என்ற தகவலை வெளியிட்டதோடு, சில முன்னணி இயக்குநர்களின் பெயர்களும் உலா வந்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்த, விக்னேஷ் சிவன், பாலா, ஏ.எல்.விஜய் ஆகியோரது பெயர் மட்டும் முக்கிய இடத்தில் இருந்தது. அதிலும் பாலா மற்றும் விஜய் பெயர்கள் மட்டும் இறுதி பட்டியலில் இருக்க, இதில் விஜய் தான் விக்ரம் வாரிசை இயக்க போகிறார் என்று இறுதி தகவல் வெளியாக, அதுவும் இல்லாமல் போய்விட, மீண்டும் இதில் குழப்பம் நிலவியது.
இந்த நிலையில், விக்ரமின் மக்கள் தொடர்பாளர், துருவ் விக்ரமின் முதல் படத்தை இயக்கப் போவது பாலா தான் என்று சற்று நேரத்திற்கு முன்பு அறிவித்துள்ளார். இதன் மூலம் விக்ரம் மகனின் முதல் படத்தின் இயக்குநர் பெயரில் இருந்த குழப்பம் நீங்கியது.
வன்முறை காட்சிகளை அதிகமாக கையாளும் பாலா, ஆபாச காட்சிகள் அதிகம் கொண்ட ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கை எப்படி கையாளப் போகிறார்? என்பது பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது.
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...