Latest News :

டூப் போடாமல் நடித்த ஹீரோவை கொண்டாடிய மக்கள்! - படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்
Saturday September-16 2023

ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஏ.டி.ஆதி நாடார் தயாரித்து இயக்கிய படம் ‘விருது’. புதுமுகங்கள் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான இப்படம் 40 நாட்கள்  வெற்றிகரமாக ஓடி லாபத்தை கொடுத்தது. தற்போது இப்படக்குழுவினர் தங்களது இரண்டாம் படத்தின் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

 

‘உலகநாதன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படம் கிராமிய கதையமைப்போடு காதலும், மோதலும் சென்டிமென்ட்டும் கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மதுரை மற்றும் இராஜபாளையத்தைச் சுற்றியுள்ள அழகான பகுதிகளில் நடந்திருக்கிறது. 

 

விருது படத்தை இயக்கிய ஏ.ஆதவன் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். விருது படத்தில் கதாநாயகனாக நடித்த அட்சயன் இந்தப் படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நடிகர் கஞ்சா கருப்பு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். ஹீரோ அட்சயனுக்கு ஜோடியாக யோகதர்சினி, கிரேட்டா இரண்டு புதுமுக நாயகிகளும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஹீரோவின் அம்மாவாக விஜய் டி.வி. புகழ் சசிகலா நடித்திருக்கிறார். வில்லனாக புதுமுக நடிகர் கடற்கரை நடித்திருக்கிறார். 

 

கதாநாயகன் சிலம்பம் பயிற்சி முழுமையாக பெற்றவர் என்பதால் சிலம்பம் இடம்பெறும் சண்டைக்காட்சிகளில் அவரே டூப் இல்லாமல் நடித்து படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்க வந்தவர்கள் அத்தனைப் பேரின் கைத்தட்டல்களையும், பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார். 

 

சார்லஸ் தனா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை சார்லஸ் தனா மற்றும் ராமநாதன் எழுதியிருக்கிறார்கள். கணேஷ் சார் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, முருகேசன் நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்பை எஸ்.பிரபாவதி கவனிக்கிறார்.

 

ஏ.டி.ஆதி நாடார் மிகப்பெரிய அளவில் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு சண்டைப்பயிற்சி மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் ஏ.ஆதவன் கவனிக்கிறார்.

Related News

9240

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery