தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். திருமணமாகி, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கும் நயன்தாராவின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபருடன் இணைந்து புதிய தொழில் ஒன்றை அவர் தொடங்க இருக்கிறார்.
சரும பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் தொழிலதிபர் டெய்சி மோர்கன், நயன்தாராவின் நட்சத்திர ஈர்ப்பு மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் படைப்பாற்றல், என இந்த மூவரும் கூட்டணி அமைத்து, தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும், சரும பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களை உயர் தரத்துடன் வழங்குவதன் மூலம் தொழில் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தையில் நுழைவதன் மூலம், அவர்களுடைய பிராண்டான '9 ஸ்கின்'- இயற்கையான அழகை மேம்படுத்தும் புதுமையான தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களை வழங்க விருக்கிறார்கள்.
கோலாலம்பூரில் '9 ஸ்கின்' எனும் வணிக முத்திரையுடன் கூடிய சரும பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்கள் கோலாகலமாக அறிமுகமாகிறது. டெய்சி மோர்கன்- நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஆகியோர் ஒன்றிணைந்து தங்களுடைய தனித்துவமான தோல் பராமரிப்பு பொருட்களை ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்துவதில் உற்சாகமாக உள்ளனர்.
மேலும் உலகில் உள்ள தனி நபர்களின் தோல் பராமரிப்பு அனுபவங்களை மேம்படுத்துவதற்காக, இந்த மூவரின் தனித்துவமான நிபுணத்துவத்தையும், பிரத்யேக அம்சத்தையும், அவர்களுடைய பொருட்கள் மூலம் கொண்டு வருகிறார்கள்.
தோல் பராமரிப்பு மற்றும் சரும பராமரிப்பு துறையில் முன்னணியில் உள்ள '9 ஸ்கின்' எனும் வணிக முத்திரையின் நற்பெயரை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், செப்டம்பர் 29ஆம் தேதியன்று மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இதன் அறிமுகம் நடைபெறுகிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...