Latest News :

உதவி இயக்குநர்களுக்கு இயக்குநர் பி.வாசு வழங்கிய பரிசு! - குவியும் பாராட்டுகள்
Saturday September-16 2023

தமிழ் திரையுலகில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான இயக்குநராக பயணித்து வரும் பி.வாசுவின் இயக்கத்தில் உருவாகும் 65 வது படம் ‘சந்திரமுகி 2’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், நேற்று இயக்குநர் பி.வாசு தனது பிறந்தநாளை கொண்டாடினார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாகி  ஜி. கே. எம். தமிழ் குமரன், ராகவா லாரன்ஸ் மற்றும் பி. வாசுவின் உதவியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். இதன் போது இயக்குநர் பி. வாசு தன்னுடைய உதவியாளர்களுக்கு லேப்டாப்களை பரிசாக வழங்கி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். 

 

தனது பிறந்தநாளில் மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் எனப்தற்காக தனது உதவி இயக்குநர்களுக்கு நவீன லேப் டாப்களை பரிசாக வழங்கிய இயக்குநர் பி.வாசுவின் செயலை தமிழ் திரையுலகம் மட்டும் இன்றி சமூக வலைதளங்களிலும் மக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

Director P Vasu Birthday Celebration

 

லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'சந்திரமுகி 2' படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், 'வைகைப்புயல்' வடிவேலு,  ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் விருதை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராக இருக்கும் இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி. கே. எம். தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Related News

9242

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery