Latest News :

’ஜவான்’ படத்தின் சாதனை வெற்றி! - பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு
Saturday September-16 2023

இயக்குநட் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘ஜவான்’. இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க, தீபிகா படுகோனே, நயன்தாரா முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான ‘ஜவான்’ தற்போதுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி இன்றுடன் 9 நாட்கள் ஆன நிலையில், உலகம் முழுவதும் ரூ.735.02 கோடி வசூல் ஈட்டி சாதனைப்படைத்திருப்பதோடு, ரூ.1000 கோடி வசூலை நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், ’ஜவான்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் அட்லீ, விஜய் சேதுபதி, ஷாருக்கான், தீபிகா படுகோனே என பலர் கலந்துக்கொண்டார்கள். நாயகி நயன்தாரா  சில காரணங்களால் பங்கேற்க முடியாததால், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு அன்பான வாழ்த்துக்களை அனுப்பினார். இவர்களைத் தவிர, ஜவானுக்குப் பின்னால் முதுகெலும்பாக இருந்த ஜவானின் தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

Jawan Success Celebration

 

பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜவான் படத்தின்  பாடல் நிகழ்ச்சியை படக்குழு  நிகழ்த்தியது. இந்நிகழ்ச்சி மும்பையில் 2 மணி நேரம் மாலையில் நடைபெற்றது. படத்தின் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர், சந்திப்பின் போது நேரலையில் இசையமைத்தார், கிங் கானின் ராப் டிராக்கை எழுதி பாடிய  ராஜ குமாரியும் இதில் பங்குகொண்டார். 

 

இந்த  செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் சாலேயா பாடலுக்கு ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடனமாடி அசத்தினர். இதற்கு முன்னதாக, ஷாருக்கான் நாட் ராமையா வஸ்தாவய்யா பாடலையும் நேரலையில் நிகழ்த்தினார், அவரது வசீகரமான நடனத்தால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

Related News

9243

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery