திகில் மற்றும் திரில்லர் வகைப் படங்களை மட்டுமே தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சக்ரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் எஸ். சஷிகாந்த் இணைந்து தயாரிக்கும் படம் ‘பிரம்மயுகம்’. இதில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டி முதன்மை வேடத்தில் நடிக்க, அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷெஹ்னாத் ஜலால் ஒளிப்பதிவு செய்ய, கிறிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார். ஷபீக் முகமது அலி படத்தொகுப்பு செய்ய, ஜோதிஷ் சங்கர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். டிடி.ராமகிருஷ்ணன் வசனம் எழுத, ரோனெக்ஸ் சேவியர் ஒப்பனை கலைஞராகவும், மெல்லி.ஜே ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி கொச்சி மற்றும் ஒட்டப்பாலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக தொடங்கிய நிலையில், தற்போது நடிகர் மம்முட்டிக்கான காட்சிகள் அனைத்தையும் படக்குழு வெற்றிகரமாக முடித்திருக்கிறது. மேலும், மீதமுள்ள காட்சிகளை அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் என மற்ற நடிகர்களை வைத்து விறுவிறுப்பாக படமாக்கி வருகிறது.
படத்தின் முழு படப்பிடிப்பையும் வரும் அக்டோபர் மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ள படக்குழு ‘பிரம்மயுகம்’ படத்தை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடுவதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...