Latest News :

இளையராஜா ஆசியுடன் தொடங்கிய ‘சாரா’ திரைப்படம்!
Monday September-18 2023

இயக்குநர் ரஜித் கண்ணா இயக்கத்தில், விஜய் விஷ்வா நாயகனாகவும், சாக்‌ஷி அகர்வால் நாயகியாகவும் நடிக்கும் படம் ‘சாரா’. இவர்களுடன் யோகி பாபு, ரோபோ சங்கர், பொன்வண்ணன், அம்பிகா, ரேகா நாயர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை விஷ்வா ட்ரீம் வேர்ல்டு நிறுவனம் சார்பில் ஆர்.விஜயலக்‌ஷ்மி மற்றும் செல்லம்மாள் - குருசாமி.ஜி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

 

ஜெ.லக்‌ஷ்மண் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். எஸ்.பி.அஹமெத் படத்தொகுப்பு செய்ய, சுரேஷ் கல்லெறி கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, சினேகன், அருண் பாரதி பாடல்கள் எழுதுகின்றனர். மக்கள் தொடர்பாளராக ஏ.ராஜா பணியாற்றுகிறார்.

 

பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு பரபரப்பான திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் கதை கட்டுமான பணி நடக்கும் கட்டிடத்தில் நடக்க கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. 

 

இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் தொடங்கியது. இசையமைப்பாளர் இளையராஜாவின் ஸ்டுடியோவில் இன்று நடைபெற்ற துவக்க விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றி படத்தை துவக்கி வைத்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, “இங்கு வந்து வாழ்த்து தெரிவித்த  அனைவருக்கும் நன்றி, வந்துள்ள அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள், இந்தப் பூஜையை விளக்கேற்றி துவக்கி வைத்த என் தந்தைக்கு நன்றி. இந்தப் படம் அனைத்து உணர்வுகளையும் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும், கண்டிப்பாக ஒரு நல்ல படமாக உருவாகும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

கதாநாயாகன் விஜய் விஷ்வா பேசுகையில், “அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். சாரா திரைப்படத்தின் பூஜைக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.  கார்த்திக்ராஜாவின் இசையில் நான்  நடிக்கவுள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது. விஸ்வா டிரீம் வோர்ல்ட் கம்பெனியினர் வழங்கும் இந்த திரைப்படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து முதன்முறையாக நடிக்கிறேன் மேலும்  சாக்‌ஷி, பொன்வண்ணன், அம்பிகா, ரோபோ சங்கர், ஆகியோருடன் இணைந்து நடிப்பது மிகவும்  மகிழ்ச்சி. அனைவருக்கும்.” என்றார்.

 

கதாநாயகி சாக்‌ஷி பேசுகையில், “அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். என்னை இந்த திரைப்படத்திற்கு தேர்வு செய்த இயக்குநருக்கு என் முதல் நன்றி.    கார்த்திக்ராஜா சார், இளையராஜா சார், மற்றும் வந்திருக்கும் அனைவருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி. இந்தப்படம் ஒரு புதுமையான அனுபவம் தரும் படமாக இருக்கும்” என்றார்.

 

நடிகர் ரோபோ சங்கர் பேசுகையில், “சாரா திரைப்படத்தின் துவக்க விழாவில் இருப்பது மகிழ்ச்சி.  இசை மாமேதை மேஸ்ட்ரோ இளையராஜா ஐயா, இயக்குநர் தயாரிப்பாளர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள், வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி, இந்தப் படம் மூலமாக விஜய் விஷ்வா, ஒரு நல்ல திரைப்படம் தருவார் என்ற  நம்பிக்கை இருக்கிறது, அவருக்கும் படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.

 

மிரட்டல் செல்வா ஸ்டன்ட் மாஸ்டர், “அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் வணக்கம், நடிகை சாக்‌ஷியும் நானும் இணையும் இரண்டாவது படம் இதுவாகும் . இந்த திரைப்படத்தில் அதிக சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அனைவரும் இந்தப் படத்திற்காக காத்திருக்கிறோம். இந்த திரைப்படம் ஒரு சஸ்பன்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாகவுள்ளது, இந்த திரைப்படம் நன்றாக வர வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.

 

நடிகை ரேகா நாயர் பேசுகையில், “சாரா பட பூஜைக்கு வந்ததற்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள். கதாநாயகனாக விஜய்விஷ்வா நடிக்கிறார் அவருக்கும் படகுழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி” என்றார்.

 

இயக்குநர் ரஜித் கண்ணா பேசுகையில், “ஒரு இக்கட்டான சூழலில், தனக்காக எல்லாவற்றையும் விட்டு வந்த காதலனையா ? அல்லது தனக்காக வாழ்க்கையே தியாகம் செய்த  நண்பனையா ? நாயகி யாரை காப்பாற்றுகிறாள் என்பதே இப்படம். கட்டிடங்கள் கட்டப்படும் பின்னணியில் இப்படத்தின் கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது, பல சண்டைக்காட்சிகளுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் இருக்கும். விஜய் விஷ்வா நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் யோகிபாபு, ரோபோசங்கர் ஆகியோர்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். கண்டிப்பாக நல்ல அனுபவம் தரும் படமாக இப்படம் இருக்கும், நீங்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

Related News

9247

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery