இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் ‘பிரதார்’. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர்களுடன் நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும், இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விவேகாந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
படம் குறித்து கூறிய இயக்குநர் ராஜேஷ்.எம், “ஆக்ஷன் ததும்பும் வித்தியாசமான திரைப்படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து முத்திரை பதித்து வந்தாலும் 'ஜெயம்', 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்', மற்றும் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' ஆகிய குடும்ப கதையம்சம் உள்ள திரைப்படங்கள் அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமானவை. இந்த வரிசையில் 'பிரதர்' இணையும் என்பதில் சந்தேகம் இல்லை.
சென்னை, ஹைதராபாத், ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கலகலப்பான குடும்ப கதைக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி மீண்டும் திரும்பும் இத்திரைப்படம் 6 முதல் 60 வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் அமையும் என்று நம்புகிறோம்.” என்றார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...