விஜய் போன்ற உச்ச நடிகர்களை வைத்து மிக பிரமாண்டமான திரைப்படங்களை தயாரித்து வரும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வளர்ந்து வரும் மற்றும் அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களை வைத்து ‘லவ் டுடே’ போன்ற படங்களை தயாரித்து மிகப்பெரிய வெற்றியையும் கொடுத்து வருகிறது.
அந்த வகையில், விஜயின் 68 வது படம், ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன் 2’ போன்ற படங்களை தயாரித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனம் அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ என்ற நகைச்சுவை திகில் படத்தையும் தயாரிக்கிறது. விநாயகர் சதுர்த்தி பண்டியை முன்னிட்டு இப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்துடன் உலகத்தர தயாரிப்பில் உருவாகும் நகைச்சுவை நிறைந்த திகில் திரைப்படமான இதில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. 'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் செல்வின் ராஜ் சேவியர், இயக்குநர்கள் சிம்புதேவன், சுமந்த் ராதாகிருஷ்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். சென்னையில் பெரும் பொருட்செலவில் பழங்கால அரங்குகள் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
'கான்ஜூரிங் கண்ணப்பன்' திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்ற, நிர்வாக தயாரிப்பை எஸ். எம். வெங்கட் மாணிக்கம் கவனிக்கிறார். சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ, நமோ நாராயணன் போன்ற நட்சத்திரங்களுடன், 'நானே வருவேன்' படத்தில் நடித்துள்ள எல்லி ஆவரம், ஜேஸன் ஷா, பிஎனேடிக்ட் காரெட் போன்ற வெளிநாட்டு நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.
'கான்ஜூரிங் கண்ணப்பன்' பற்றி கூறிய இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர், ”ரசிகர்களுக்கு வித்தியாசமான புதுவித அனுபவத்தை கொடுப்பதோடு நல்ல பொழுதுப்போக்காகவும் இப்படம் இருக்கும். முக்கியமாக குழந்தைகள் பார்த்து ரசிக்கும் வகையிலும் நகைச்சுவை, திகில், ஃபான்டசி கலந்த படமாக இதை உருவாக்கியுள்ளோம். இப்படம் அனைத்து வயதினரையும் நிச்சயம் கவரும்” என்றார்.
முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகும் ’கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படம் இந்த வருடம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...