‘ஜில் ஜங் ஜக்’ படத்திற்கு பிறகு சத்தமே இல்லாமல் சித்தார்த் தயாரித்து நடித்து வந்த படம் ‘அவள்’. திகில் படமான இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுமன், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
முழு படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை மிலிண்ட் ராவ் இயக்கியுள்ளார்.
இன்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் படத்தின் டிரைலர் மற்றும் ஒரு பாடல் காட்சி திரையிடப்பட்டது. திகில் காட்சிகள் நிறைந்த டிரைலர் மிரட்டோ மிரட்டு என்று மிரட்டினாலும், அதன் பிறகு திரையிடப்பட்ட பாடல் காட்சி வேறு விதத்தில் மிரட்டி விட்டது.
அந்த பாடல் காட்சியில், ஆண்ட்ரியாவை வலைத்து வலைத்து சித்தார்த் லிப் டூ லிப் முத்தத்தை கொடுக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல, அடிக்கடி ஆண்ட்ரியாவின் உதடை கவ்வியவாறே பாட்டு முழுவதும் நடித்திருக்கும் சித்தார்த், இந்த விஷயத்தில் கமல்ஹாசனையும் மிஞ்சிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
‘ஹர ஹர மஹாதேவகி’ போன்ற அடுல்டு காமெடி படங்கள் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், சித்தார்த் - ஆண்ட்ரியாவின் இந்த லிப் டூ லிப் முத்த மழை பாடல், ‘அவள்’ படத்தை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கும் கருவியாக இருக்கும் என்பது நிச்சயம்.
இந்த படத்தை இயக்கியுள்ள மிலிண்ட் ராவும், சித்தார்த்தும் மணிரத்னத்திடம் ஒன்றாக உதவி இயக்குநர்களாக பணியாற்றினார்களாம். அந்த நட்பின் அடையாளமாகவே இந்த படத்தில் நடித்திருக்கும் சித்தார்த், ஹாலிவுட் படங்கள் பல மக்களை பயமுறுத்தும் அளவிற்கு இருக்கும். ஆனால், இந்தியப் படங்கள் அந்த அளவிற்கு இல்லை. இந்தியாவே பயப்படும் அளவிற்கு ஒரு படம் எடுக்க நினைத்தேன். அது தான் ‘அவள்’ படமாக உருவாக்கி இருக்கிறேன்.” என்றார்.
இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...
இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'கரவாலி'...
இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது...