ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் தயாரித்து, கதை எழுதி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சரக்கு’. ஜெயக்குமார்.ஜெ இயக்கியிருக்கும் இப்படத்திற்கு வின்செண்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். சித்தார்த் விபில் இசையமைக்க, படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். எஸ்.தேவராஜ் படத்தொகுப்பு செய்ய, கனல் கண்ணன், ஸ்டண்ட் சில்வா ஆகியோர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.
மிகப்பெரிய பொருட்செலவில், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மூலம் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, சரவண சுப்பையா, சேசு, அனுமோகன், பாரதி கண்ணன், ஆடுகளம் நரேன், தீனா, லொள்ளு சபா மனோகர், வினோதினி, சசி லயா, டி.எஸ்.ஆர், மதுமிதா, வலினா, மோகன்ராம், மூசா, ரெனீஸ், நிகிதா, கூல் சுரேஷ், நீதியின் குரல் சி.ஆர்.பாஸ்கர், கோமாளி சரவணன், பபிதா என 40-க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், ‘சரக்கு’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. தாரை தப்பட்டை, ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், பிரமாண்டமான அம்மன் சிலை அலங்காரம், அக்கினி சட்டி என வித்தியாசமான முறையில் நடைபெற்ற ’சரக்கு’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட விழா தமிழ் சினிமாவில் பேசுப்பொருளாகியுள்ளது. மேலும், நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் இசையமைத்த அம்மன் பாடல் திரையியிட்ட போது, நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பெண்கள் அருள் வந்து ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கே பாக்யராஜ், பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், லியாகத் அலிகான், ரவிமரியா, பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ், கோதண்டம், சூப்பர் குட் சுப்பிரமணியம், சூரிய பிரபா, ஸ்னாசி தமிழச்சி திவ்யா ஆகியோர் கலந்துக் கொண்டு சரக்கு படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் கதாநாயகன் மன்சூர் அலிகானை பாராட்டி பேசினார்கள்.
இயக்குநர் லியாகத் அலிகான் பேசுகையில், “’சரக்கு’ படத்தை பற்றி பேசுவதற்கு முன்னாள் மன்சூர் அலிகான் பற்றி பேச வேண்டும். அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடும் போது உதவி இயக்குநர் ஒருவர் தான் எனக்கு அவரை அறிமுகப்படுத்தினார். நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார் என்று கூறினார். அன்று முதல் மன்சூர் அலிகான் அடிக்கடி என் வீட்டுக்கு வருவார். வந்ததும், அதிகாரமாக பாபி ஒரு டீ போடுங்க என்று கேட்பார். இப்படி அவர் என் வீட்டுக்கு வரும் போது, என் வீட்டு பகுதியில் இருப்பவர்கள் அவரை பார்த்ததும், என்னிடம் வந்து “அவர் யாருங்க ஆளே ஒரு மாதிரியாக இருக்காரு, வரும்போது ஒரு மாதிரியா பண்றாரு, போகும் போது ஒரு மாதிரி போறாரு” என்று கேட்டார்கள். நான் உடனே எங்கள் நிறுவன படத்தில் நடிக்க போகிறார், என்று சொல்லிவிட்டேன். அப்போது அவர் கேப்டன் பிரபாகரன் படத்தில் ஒப்பந்தமாகவில்லை. நான் அப்படி சொன்னதும், அவர்கள் நிச்சயம் இவர் பெரிய நடிகராக வருவார், என்று சொன்னார்கள். கேப்டன் பிரபாகரன் படத்தில் ஒப்பந்தம் ஆவதற்கு முன்பாகவே மன்சூர் அலிகான் பெரிய நடிகராக வருவார் என்பதை பொதுமக்கள் கணித்துவிட்டார்கள். காரணம், அவரிடம் சரக்கு இருப்பதை அன்றே மக்கள் புரிந்துக்கொண்டனர். அதேபோல் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரும் சரக்கு உள்ள நபர் தான் அதனால் தான் மன்சூர் வீரபத்ரன் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று முடிவு செய்து அவரை நடிக்க வைத்தார்.
‘சரக்கு’ படத்தில் சொல்லப்படும் விசயத்தை சொல்ல தைரியம் இல்லை. தான் தயாரிக்கும் படங்களில் சமூக பிரச்சனைகளை பேசி வரும் மன்சூர் அலிகான், இந்த படத்தில் நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை பற்றி தைரியமாக பேசியிருக்கிறார். இந்த மாதிரியான ஒரு படம் எடுக்க யாருக்கும் துணிச்சல் வராது என்பதை இங்கே அழுத்தமாக பதிவு செய்கிறேன். சரக்கு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று மன்சூர் அலிகான், இயக்குநர் அனைவருக்கும் பேரும், புகழையும் பெற்று தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
பழ.கருப்பையா பேசுகையில், “டிரைலரிலேயே மிகப்பெரிய அளவுக்கு மிரட்டி விட்டார்கள். என் பக்கத்தில் இருந்த தமிழ் செல்வன் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார், ரொம்ப கலங்கி போய் பார்த்துக் கொண்டிருந்தார். இது ஆடியன் ரியாக்ஷன். ரொம்ப நல்ல படம், இதில் நான் நீதியரசராக நடித்திருக்கிறேன். நான் என்ன பேச வேண்டும், மன்சூர் என்ன பேசுவார் என்று கேட்டேன். “நீங்கள் பேச வேண்டியது இந்த தாளில் இருக்கிறது, மன்சூர் அலிகான் என்ன பேச வேண்டும் என்பது அவருக்குத்தான் தெரியும்” என்று சொன்னார்கள். ஏன் என்றால், எழுதி வைத்து அவர் பேசவில்லை. ஒரு நீண்ட உரை அது. தெளிவாக அரசியல் மேடையில் பேசுவது போல், சட்ட நுணுக்களோடு அவர் பேசினார். அவர் பேசியதற்கு ஏற்றவாறு நான் பேசினேன். மன்சூர் அலிகான் மிக தெளிவான மனிதர். இது நாட்டுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய படம். எந்த ஒரு பெரிய செய்தியையும் கதையாக சொல்லும் போது மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுபோல், இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விசயம் பெரிய செய்தி, கனத்த செய்தி, மக்கள் விரும்பாத செய்தி, அவர்களுக்கு அறிவூட்டுகிற செய்தி, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செய்தி. இதை கலை வடிவத்தில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கின்ற போது, எத்தனை பேட் குடியை விடுகின்றார்களோ அது இந்த படத்திற்கு வெற்றி. இந்த படத்தை தயாரித்து நடித்திருக்கும் மன்சூர் அலிகான், இயக்கியிருக்கும் ஜெயக்குமார், திரையரங்குகளில் ஓட்டக்கூடிய விநியோகஸ்தர்கள் அத்தனை பேரும் இந்த சமுதாயத்திற்கு தொண்டு செய்கின்றவர்கள். எப்படி சொன்னால், எதை சொன்னால் ஓடும், எதை விலையாக்க முடியும் என்று சிந்திக்காமல், மக்களுக்கு தேவையான ஒரு செய்தியை, மக்களை மாற்றுவதற்கான ஒரு செய்தியை படமாக கொடுத்திருக்கிறார்கள். நாரிப்போன சமுதாயத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று நினைப்பதற்கு நல்ல மனமும், தெளிந்த அறிவும் வேண்டும். பொதுநோக்கு இருக்க வேண்டும். நடிகர்களில் நான் பார்த்தவரை மன்சூர் அலிகான் போல் தமிழ் பற்றாளர் யாருமே இல்லை. ஒரு நடிகராக இருக்கிறவர் அதற்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார். சாதாரணமாக சக மனிதர்களிடம் பழகுவது போன்ற அனைத்தும் அவருடைய நற்குணங்களுக்கு சான்று. இந்த படம், இதன் கதை, அமைப்பு எனக்கு தெரியும். இவ்வளவு பெரிய கனத்த செய்தியை லாப குறிக்கோளாக கொள்ளமால் சமூகத்தை மாற்றியமைக்கும் நோக்கத்தோடு எடுத்திருக்கும் இந்த படம் வெளியாகும் போது தமிழகம் அதிர வேண்டும். 40 ஆண்டுகளாக கேட்க நாதியற்று போன இந்த தமிழகத்தில் இதை கேட்பதற்கு மன்சூர் அலிகான் வந்திருக்கிறார்.” என்றார்.
நாஞ்சில் சம்பத் பேசுகையில், “ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடியதே இல்லை, எல்லா கூட்டத்தையும் மன்சூர் அலிகான் வென்று காட்டிவிட்டார். மன்சூர் அலிகான் ஒரு புதிரான மனிதர். அவருடைய பேச்சு, நடவடிக்கை எல்லாம் ஒரு சித்தர் விளையாட்டு போல் எனக்கு தோன்றும். அவர் இந்த படத்தில் நீங்கள் ஒரு வேடத்தில் நடிகக் வேண்டும் என்று கேட்டார், என்ன கதை என்று நான் கேட்டேன். கதையாவது கிடையாவது வாங்க, என்று சொன்னார். ஜெயக்குமார் இயக்கத்தில், ராஜ் கென்னடி பிலிம்ஸ் தயாரிப்பில் மன்சூர் அலிகான் வசனம் எழுதி இந்த படத்தை கொண்டு வந்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு அழைப்பிதழ் எனக்கு வாட்ஸ் அப்பில் வந்தது. அது மிக வித்தியாசமாக இருந்தது. இன்சா அல்லாஹ் என்று தொடங்கியது. இதில் மன்சூர் அலிகான் தெரிகிறார். அதே சமயம், உப்பிலி அம்மன் கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் வெள்ளி வாகனத்தில் புறப்படும் நேரத்தில் நிகழ்ச்சி நடக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இது தான் இந்த நாட்டுக்கு இப்போது தேவை. சமயம் கடந்து, மதம் கடந்து எல்லாம் சமயத்தையும் ஒரே நேர் கோட்டியில் வைத்து பாக்கின்ற பார்வை, இந்த மண்ணை பொன்னாக்குகின்றவர்களுக்கு தேவைப்படுகிறது. இந்த இடம் தான் என்னை மிகவும் கவர்ந்தது.
வசனம் பேசுவதற்கோ, நடிப்பதற்கோ நான் சிரமப்படவில்லை. மதுவிலக்கு என்பது இன்று ஒரு போலித்தனமான வார்த்தையாகி விட்டது. நாரிப்போன சமூகம் என்று அண்ணன் பழ கருப்பையா சொன்னார். இது நாரிப்போன சமூகம் அல்ல சரக்கில் ஊரிப்போன தமிழகம். எந்த கடையில் விற்கவில்லை என்றாலும் சாராயக் கடை நன்றாக விற்கிறது. கொடுமை என்னவென்றால், இந்த படத்தில் நான் தான் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக நடித்திருக்கிறேன். இந்த படம் சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்டும். மாவோ ஆறாயிரம் கிலோ மீட்டர் தொலைவு நடந்தான், குடிசை மக்களிடம் ஆயுதங்களை கொடுத்தான். அவனுடைய அந்த நெடுந்தூர நடைப்பயணத்திற்கு காரணம், கஞ்சா போதையில் மூழ்கி கிடந்த சீன இளைஞர்களை மீட்பது தான். அவனுடைய அந்த நடைப்பயணத்தால், நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அபின் நிறப்பப்பட்ட கப்பலை மக்கள் தீ வைத்து எரித்து அழித்தார்கள். அந்த யுத்தத்திற்கு வரலாற்றில் அபினி யுத்தம் என்று பெயர். அப்படி ஒரு போராட்டம் தமிழகத்தில் வர வேண்டும். அன்று அதை மாவோ செய்தான், இன்று மன்சூர் அலிகான் செய்கிறார். ஆகவே பூத்து வருகிற புதிய தலைமுறை பள்லி மாணவனாக இருக்கும் போதே குடிக்க தொடங்கி விடுகிறார்கள். எந்த எச்சரிக்கையையும் அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை. நான் இதுவரை மது குடித்ததில்லை, இன்று வரை என் கற்பை நான் காப்பாற்றி வந்திருக்கிறேன். இந்த படத்திலும் காப்பாற்றியிருக்கிறேன். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த மன்சூர் அலிகானுக்கு நன்றி தெரிவித்து, இதுபோன்ற சமூக பிரச்சனைகளை பேசும் படங்களை அவர் தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்று கூறி வாழ்த்த்கிறேன்.” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “என் அருமை சகோதரர் மன்சூர் அலிகான் தயாரித்து நடித்திருக்கிற புரட்சிகரமான படம். இன்று சமுதாயத்திற்கு தேவையான படம். இப்படிப்பட்ட அவலங்களில், மக்களை அழிக்கின்ற, இளைஞர்களை கெடுக்கின்ற, குடும்பத்த கெடுக்கின்ற மது நமக்கு வேண்டாம் என்று சொல்லும் படத்தை ரிஸ்க் எடுத்து மன்சூர் அலிகான் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலரை பார்த்தாலே ஒரு லட்சம் இளைஞர்கள் திருந்தி விடுவார்கள். மானம், மரியாதையை விட்டு, குடும்பம், குழந்தைகளை விட்டுவிட்டு மதுவுக்கு அடிமையாகும் கேடு கெட்ட செயல் இந்த நாட்டில் அதிகரித்திருக்கிறது. இந்த மதுவால் நாடே கெட்டு குட்டிச்சுவராகிவிட்டது என்ற கருத்தை சொல்கின்றது இந்த படம். இப்படிப்பட்ட கருத்துக்களை மன்சூர் அலிகானால் மட்டுமே சொல்ல முடியும், அந்த தைரியம் அவருக்கு மட்டுமே இருக்கிறது.
நான் தயாரித்த ‘தங்கமான தங்கச்சி’ படத்தில் சரத்குமார் நாயகனாக நடித்தார். மன்சூர் அலிகான் வில்லனாக நடித்தார். ஒரு காட்சியில் சரத்தை கட்டிப்போட்டு மன்சூர் அலிக்க வேண்டும். அடி என்று சொன்னதும், உண்மையாகவே அவரது வயிற்றில் அடித்துவிட்டார். சரத்குமார் இரண்டரை மணி நேரம் வலியால் துடித்தார். அப்படி ஒரு உணர்ச்சிப்பூர்வமான் மனிதர் மன்சூர். அவருடைய போராட்டம் உண்மையாக, நல்லதாக இருக்கும். இன்று மன்சூரலிகானின் போராட்டம் நாட்டுக்கு தேவை, அதற்கு தகுதியானவர் அவர் மட்டும் தான். என் படங்களில் நடிக்கும் போது பெரிய ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். மன்சூர் அலிகான் எதை செய்தாலும் சரியாக இருக்கும். அவர் ஒரு பாட்டுக்கு இசையமைத்திருக்கிறார். இந்து கடவுள்களை வணங்குகின்றவர்களால் கூட அப்படி ஒரு பாடலை கொடுக்க முடியாது. அந்த பாடல், அவர் எம்மதமும் சம்மதம் என்று ஏற்றுக்கொள்கின்ற மனதை காட்டுகிறது. நான் இந்த வருடத்தில் சுமார் 80 இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டிருப்பேன், ஆனால் இங்கு பார்த்த கூட்டத்தை வேறு எங்குமே பார்த்ததில்லை, அதேபோல் மேடையில் இத்தனை ஜாம்பவான்களும் இருந்ததில்லை. இவர்கள் அனைவரும் மன்சூரின் மனதுக்காக தான் வந்திருக்கிறார்கள். இங்கு வழியும் கூட்டம் அப்படியே திரையரங்கிலும் வழிய வேண்டும், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் லாபம் பெற வேண்டும், சரக்கு மிடுக்காக வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிழ் செல்வன் பேசுகையில், “தற்போதைய காலக்கட்டத்தில் நாட்டுக்கு மிக தேவையான, சொல்ல வேண்டிய கருத்தை மன்சூர் அலிகான் படமாக கொடுத்திருக்கிறார். அவர் மிக தைரியமான மனிதர், அவரால் மட்டும் தான் இதுபோன்ற படத்தை கொடுக்க முடியும். இன்று இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள், அதனால் அவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக இளம் வயதில் மதுவுக்கு அடிமையாகி விடுவதால் மலட்டுத்தனமை அதிகரிக்கிறது. அதனால், பலருக்கு குழந்தையின்மை பிரச்சனை வருகிறது. நாட்டில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்து விட்டது. இந்த நிலை மாற மதுபழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும். சரக்கு படம் வெளியான பிறகு நிச்சயம் தமிழகத்தின் நிலை மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.
கே.பாக்யராஜ் பேசுகையில், “சரக்கு படத்தின் இப்படி ஒரு பிரமாண்டமான விழாவை பார்த்து நான் பொறுமையாக உட்கார்ந்துக் கொண்டிருந்தேன். இதுபோன்ற விழாக்களில் நாம் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும். அப்படி தான் சரக்கு படத்தின் டிரைலரில் ஒரு வசனத்தை கேட்டது எனக்கு புதிதாகவும், ஆர்வமாகவும் இருந்தது. ஒளவையாரும், அதியமானும் ஒன்றாக சேர்ந்து அருந்தியதாக ஒரு வசனம் வருகிறது. எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல், இந்த பத்தின் டிரைலரை பார்த்து எத்தனை பேர் இந்த படத்தின் மீது வழக்கு போடப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அத்தனை காட்சிகளும் தத்ரூபமாக இருக்கிறது.
மன்சூர் அலிகானின் உருவம் வேறு, உள்ளம் வேறு. நான் இன்று இவ்வளவு நேரம் இங்கே இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் அவருடைய மனம் தான். இந்த படத்தில் இத்தனை பேரை நடிக்க வைத்தது சாதாரண விசயம் அல்ல. அதை அவர் மிக சரியாக செய்திருக்கிறார். சரக்கு பற்றி இங்கு ஒவ்வொருவரும் ஒரு மாதிரியாக பேசினார்கள். ஆனால், சரக்கு பற்றி சொல்லும் போது நான் சொல்வது என்னவென்றால், சரக்கு போடுபவர்கள் பேசும் போது பாசிட்டிவாக பேசுவார்கள் அது மிக ஆச்சரியமாக இருக்கும். அதை வைத்து தான் நான் நைனா என்ற ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி வைத்திருந்தேன். அந்த வேடம் இஸ்திரி போடுபவர். அவர் குடித்துக்கொண்டிருப்பதை பார்த்து ஒருவர், குடும்பம் மனைவி, புள்ள இருக்காங்கள இப்படி குடிக்கிறீங்கலே எதாவது ஆகிவிட்டால் என
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...