வித்தியாசமான திரைப்படங்கள் மூலம் தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வணங்கான்’ திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து தற்போது மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக உருவெடுத்துள்ளது.
‘மாநாடு’ படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்க, நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர்கள் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார். ஆர்.பி.நாகு கலை இயக்குநராக பணியாற்ற, சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். ஜான் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
‘வணங்கான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. நாயகன் அருண் விஜய், ஒரு கையில் விநாயகர் சிலை மற்றொரு கையில் பெரியார் சிலை என இரண்டு சிலைகளை வைத்துக்கொண்டு உடல் முழுவதும் சேறு படிந்து காட்சியாளிக்கும் வித்தியாசமான தோற்றத்தோடு காட்சியளிக்கும் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு, சமூக வலைதளங்களை பேசுப்பொருளாகி டிரெண்டாகியுள்ளது.
வரும் 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...