கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதாக நடிகர் சந்தானத்தின் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். கட்டுமான நிறுவன உரிமையாளரான இவருக்கும், நடிகர் சந்தானட்திற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்கனவே பிரச்சினை இருந்துள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சந்தானம், சண்முகசுந்தரம் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, அதுவே மோதலாக மாறியுள்ளது. இதில் சண்முகசுந்தரம் மீது சந்தானம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ரத்த காயம் அடைந்த நிலையில் சண்முகசுந்தரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சந்தானம், சண்முகசுந்தரம் இருவரும் விருகம்பாக்கம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். சண்முகசுந்தரத்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், நடிகர் சந்தானத்திடமும் விசாரணை மேற்கொள்ள உள்ளார்கள்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...
இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'கரவாலி'...
இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது...