தமிழ்நாடு டென்பின் பவுலிங் சங்கம் (TNTBA) தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு விளையாட்டுக்கான சங்கம் TBF(I) உடன் இணைந்து 32 வது தேசிய டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 13 வது தேசிய பட்டத்தை வென்ற சபீனா அத்திகாவிற்கு பாராட்டு விழா நடத்தியது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியன்று பெங்களூரில் உள்ள அமீபாவில் ஒரு வாரம் நடைபெற்ற தேசிய டென்பின் பவுலிங் போட்டியில் வெற்றி பெற்று சபீனா அத்திகா, தேசிய பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.
இதையடுத்து அவருக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தி பார்க் நட்சத்திர ஓட்டலில், அக்டோபர் 10 ஆம் தேதியன்று மாலை 4 மணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழகத்தின் பவுலிங் சாம்பியன்கள், சகோதரர்கள் மற்றும் கெளரவ விருந்தினர்கள் என ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
திரைப்பட நடிகர் திரு.சேயோன், திரைப்பட இயக்குநர் திரு.ரோஹின் வெங்கடேசன், திரைப்பட இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் திரு.சூப்பர் சுப்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொள்ள, தலைமை விருந்தினராக ஜேப்பியார் குரூப் ஆஃப் இன்ஸ்டியூட்டின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர்.ரெஜினா ஜே.முரளி கலந்துக் கொண்டார்.
13 வது தேசிய பட்டத்தை வென்ற சபீனா அத்திகாவின் சாதனையை கெளரவித்து பாராட்டி பேசிய டாக்டர்.ரெஜினா ஜே.முரளி, எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளில் அவர் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
மேலும், சபீனா அத்திகாவின் சிறப்பான உறுதி மற்றும் விடா முயற்சியை வெகுவாக பாராட்டி பேசிய டாக்டர். ரெஜினா, சபீனா போல் பல பெண்கள் டென்பின் பவுலிங் விளையாட்டில் பங்கேற்று நம் மாநிலத்திற்கு பல விருதுகளை வென்று வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...