Latest News :

’ஜவான்’ திரைப்படத்தின் உட்சபட்ச சாதனை!
Wednesday October-11 2023

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவரும்  படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாதனைகளை படைத்து வருகிறது.  ஜவான் படம் வெளியானதில் இருந்தே பல  வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது, அந்த சாதனை  மகுடத்தில் மேலும் ஒரு இறகு சேர்ந்துள்ளது, ஜவான் திரைப்படத்தினை இது வரை திரையரங்குகளில்  3.50 கோடி பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர்.  2023-ல் ஒரு இந்தியத் திரைப்படம் செய்த  உட்சபட்ச  சாதனை இதுவாகும். 

 

ஜவான் வெளியானது முதலே திரையரங்குகளில்  ஹவுஸ்ஃபுல் போர்டுகளாக நிரம்பி வழிகிறது. இந்த ஆக்‌ஷன் எண்டர்டெயினரைக் காண ஏராளமான பார்வையாளர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். இப்படத்தை ஒருமுறை மட்டுமல்லாமல், பலமுறை படத்தை ஏராளமானோர் பார்த்துள்ளனர். இதனால் இன்று படம் திரையரங்குகளில் 3.50 டிக்கெட் விற்பனையைக் கடந்து சாதனை செய்துள்ளது. 2023ல் ஒரு இந்தியத் திரைப்படத்திற்கான அதிகபட்ச சாதனை இதுவாகும். ஜவான் பாக்ஸ் ஆபிஸில் மட்டுமல்ல, பார்வையாளர்களின் இதயங்களிலும் தடுக்க முடியாத சக்தியாக இருப்பதையே இது காட்டுகிறது.

 

’ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

Related News

9289

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!
Tuesday March-04 2025

நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...

Recent Gallery