டைகர் ஷ்ராஃப், க்ரிதி சனோன், அமிதாப் பச்சன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் ‘கண்பத்’. பூஜா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான 'கண்பத்' திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களையும் பார்வையாளர்களையும் முழுமையான பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த திரைப்படம் அக்டோபர் 20 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.
இப்படத்தில் ஒழுங்காக இணைக்கப்பட்ட VFX அனைவரையும் கவர்ந்து இருக்கிறது. இது படத்திற்கு சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க உதவுகிறது. ஜாக்கி பாக்னானி, உலகத் தரம் வாய்ந்த சினிமாக் காட்சியைக் கொண்டு வருவதையும், இதுவரை பார்த்திராத VFX, பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.
பூஜா எண்டர்டெயின்மென்ட் மற்றும் குட் கோ வழங்கும் ’கண்பத்: எ ஹீரோ இஸ் பார்ன்’ படத்தை விகாஸ் பாஹ்ல் இயக்கி இருக்கிறார். இப்படத்தை வாசு பாக்னானி, ஜாக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக் மற்றும் விகாஸ் பால் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...