Latest News :

அதர்வா முரளி நடிக்கும் ’டிஎன்ஏ’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது!
Wednesday October-11 2023

’மனம் கொத்தி பறவை’, ’டாடா’, ’கழுவேத்தி மூர்க்கன்’ போன்ற பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்ற பல படங்களைக் கொடுத்த ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார், தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘டி.என்.ஏ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் முதல் முறையாக அதர்வா முரளியுடன் இந்தப் படத்தின் மூலம் இணைகிறது.

 

'ஒரு நாள் கூத்து’, ’மான்ஸ்டர்’ மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’ஃபர்ஹானா’ போன்ற சிறந்தப் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 11, 2023) பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

 

குடும்ப பார்வையாளர்களின் மனதை வென்ற நடிகர் அதர்வா முரளிக்கு இந்தத் திரைப்படம் மற்றுமொரு பாராட்டுக்குரியதாக நிச்சயம் இருக்கும். சமீபத்தில் வெளியான ‘சித்தா’ படத்தில் தனது அசத்தலான நடிப்பால் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகை நிமிஷா சஜயன், இந்தப் படத்தில் அதர்வா முரளிக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்கிறார்.

 

முழு படமும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது மற்றும் திட்டமிட்டபடி குறுகிய காலத்தில் விரைவாக முடிவடையும். மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Related News

9291

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery