திரைத்துறையில் நடக்கும் மோசடிகளின் பின்னணியின் உண்மைகளை நகைச்சுவையாக சொல்லும் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘திரையின் மறுபக்கம்’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு தயாரிக்கவும் செய்திருக்கிறார் நிதின் சாம்சன். இவருடன் மொஹமத் கவுஸ், மணிகண்டன், ஹேமா ஜெனிலியா, ஸ்ரீ ரிஷா, ஜோதி, யாசர், சத்யமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
விவசாயியான சத்யமூர்த்தி தீவிர திரைப்பட ரசிகராக இருப்பதோடு, சினிமா பற்றி முழுமையாக தெரியாமல் தெரிந்ததை வைத்து தன்னை இயக்குநராக காடிக்கொண்டிருக்கும் செந்தில் இயக்கத்தில் திரைப்படம் ஒன்றை தயாரிப்பதற்காக தனது நிலத்தை அடமானம் வைக்கிறார். மேலும், படம் இயக்க வழி தெரியாமல் தடுமாறும் செந்தில், சத்யமூர்த்தியின் வீட்டை திரைப்பட பையான்சியர் அன்பரசியிடம் அடமானம் வைக்கிறார்.
இதற்கிடையே, இயக்குநர் செந்தில் படம் இயக்க தெரியாமல் பயங்கரமாக சொதப்ப, அவரை நீக்கி விட்டு படத்தின் நாயகன் மற்றும் துணை இயக்குநர் உதவியோடு சத்யமூர்த்தி படத்தை முடிக்கிறார். படத்தை முடித்தவர் அதை வெளிக்கொண்டு வருவதற்கு பல்வேறு தடைகளை சந்திப்பதோடு, பைனான்சியர் அன்பரசியின் கழுகுப்பிடியிலும் சிக்கி கொள்ள, இறுதியில் படம் வெளிவந்ததா?, இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
சினிமாவை பற்றிய சில நிஜ சம்பவங்களை மையமாக வைத்து இயல்பாகவும், நகைச்சுவையாகவும் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, செங்கல்பட்டு, அமெரிக்காவின் புளோரிடா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜயின் ‘லியோ’ திரைப்படம் வெளியீட்டு தொடர்ந்து எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில், இப்படக்குழு தைரியமாக வரும் அக்டோபர் 20 ஆம் தேதி 60 திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறார்கள்.
இதனால், விஜயின் ‘லியோ’ படத்துடன் மோதும் ‘திரையின் மறுபக்கம்’ என்ற தலைப்பில் இப்படம் குறித்த செய்திகள் இணையதளம் மற்றும் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...