பிரபல தெலுங்கு இயக்குநர் அனில் ராவிப்பூடி இயக்கத்தில், பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘பகவந்த் கேசரி’. இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். இவர்களுடன் அர்ஜுன் ராம்பால், ஸ்ரீலீலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். வரும் அக்டோபர் 19 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை சென்னையை சேர்ந்த நாக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் வெளியிடும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தரமான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட சிறந்த திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள நாக்ஸ் ஸ்டுடியோஸ், தமிழில் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் குறித்த அறிவிப்பையும் விரைவில் வெளியிட உள்ளது. மேலும் பல திரைப்படங்கல் குறித்த அறிவிப்புகளை நாக்ஸ் ஸ்டுடியோஸ் அடுத்தடுத்து அறிவிக்க உள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...