இசையமைப்பாளர் டி.இமான் அவரது முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். அவருடைய விவகாரத்துக்கு காரணம் சிவகார்த்திகேயன் தான் என்ற தகவல் வெளியானாலும், குடும்ப பிரச்சனை என்பதால் இது குறித்து எந்த இணையதளமும் செய்தி வெளியிடவில்லை.
இந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் டி.இமானே இது குறித்து வெளிப்படையாக பேசியிருப்பதால், அவருடைய விவகாரத்தும், அதற்கு காரணமான சிவகார்த்திகேயன் பற்றியும் செய்திகள் தீயாக பரவ தொடங்கியுள்ளது.
மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து டி.இமான் சொல்லிய கருத்தை மறுக்கும் விதமாக அவருடைய முதல் மனைவி மோனிகா, விளக்கம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், ”சிவகார்த்திகேயனுக்கும் இமானுக்கும் நல்ல நட்பு உண்டு. எங்களுக்கு விவாகரத்து நடக்கக்கூடாதுன்னு பல முயற்சிகளை எடுத்தார். இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் பண்ணவில்லை. அது இமானுக்கு பிடிக்கவில்லை.
ஒரு வருடத்திற்கு முன்னாடி பொண்ணையெல்லாம் பார்த்து வைத்துவிட்டுதான், இமான் எனக்கு விவாகரத்தே கொடுத்தார். நான் முடியாதுன்னு சொன்னதுக்கு, அரசியல்வாதிகளை வைத்து 'உங்கப்பாவைக் கொன்னுடுவோம்'னு மிரட்டல் எல்லாம் கொடுத்து 46 நாட்களிலேயே விவாகரத்தும் வாங்கினார். இப்போ, இமானுக்கு பட வாய்ப்புகள் சரியாக இல்லை. அதனால் தான், இப்படியெல்லாம் பேசி பட வாய்ப்புகளை பிடிக்க நினைக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் டி.இமானின் வாழ்க்கையில் சிவகார்த்திகேயன் விளையாடி விட்டதாக வெளியான தகவல்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாக இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...