ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘ஜப்பான்’. இது கார்த்தியின் 25 வது படம் என்பதால் இப்படத்தை கொண்டாட முடிவு செய்த அவருடைய ரசிகர்கள், இதற்காக 25 ஆயிரம் பேருக்கு அன்னதாம் வழங்கும் பணியை தொடங்கியுள்ளார்கள். ஒரே நாளில் அல்லாமல் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ‘ஜப்பான்’ திரைப்படம் வெளியாகும் நவம்பர் 10 ஆம் தேதி வரை தினமும் 1000 பேர் வீதம் 25 நாட்களுக்கு 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க இருக்கிறார்கள்.
கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த தினசரி அன்னதானத் திட்டத்தை ‘ஜப்பான்’ படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு மற்றும் இயக்குநர் ராஜு முருகன் இணைந்து தொடங்கி வைத்தனர். இதன் போது கார்த்தி மக்கள் நல மன்றத்தின் அகில இந்திய செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், மாவட்ட தலைவர்களும் உடனிருந்தனர்.
நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் 25 வது திரைப்படம் 'ஜப்பான்'. இதனை முன்னிட்டு 25 ஆயிரம் மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என நடிகர் கார்த்தி விருப்பம் தெரிவித்தார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கார்த்தி மக்கள் நல மன்றம் மற்றும் உழவன் அறக்கட்டளை சார்பில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குவதை விட, நேற்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு நாள்தோறும் ஆயிரம் பேருக்கு உணவு வழங்க திட்டமிட்டனர்.
பசித்த வயிறுக்கு உணவிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்டிருக்கும் இந்த திட்டத்தை கண்டு, யாரேனும் ஒருவர் பசித்த ஒருவருக்கு உணவு வழங்கினாலும் கார்த்தியின் நோக்கம் வெற்றி பெறும் என கார்த்தி மக்கள் நல மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அக்டோபர் 17ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தி. நகர் பகுதியில் கார்த்தி மக்கள் நல மன்றத்தின் அகில இந்திய செயலாளர் வீரமணி, மாநில நிர்வாகிகள், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் மாவட்ட தலைவர்கள் ஆகியோர் உடனிருக்க, 'ஜப்பான்' படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு மற்றும் இயக்குநர் ராஜுமுருகன் ஆகியோர் ஆயிரம் பேருக்கு சுவையான உணவு வழங்கும் திட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிக்கும் 25 வது படமான 'ஜப்பான்' படத்தின் வெற்றிக்காக, 25 நாட்கள் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் உன்னத திட்டத்தை முன்னெடுத்ததற்காக திரையுலகினரும், ரசிகர்களும் கார்த்தி மற்றும் அவருடைய மக்கள் நல மன்றத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...