Latest News :

’பிரமயுகம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Friday October-20 2023

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘பிரமயுகம்’. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பன்மொழி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கி, ஒட்டப்பாலம், கொச்சி, அதிரப்பள்ளி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.

 

இப்படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்கும் மம்முட்டியின் தோற்றம் அடங்கிய போஸ்டர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, மம்முட்டியின் சமீபத்திய வெளியீடான ‘கண்ணூர் ஸ்காவ்ட்’ படம் வெற்றிப் பெற்றதும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் ஆவல் ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது.

 

சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ்.சஷிகாந்த் தயாரித்த 'பிரமயுகம்' படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்ள நடித்துள்ளனர். மேலும் ஷேனாத் ஜலால் ஒளிப்பதிவாளராகவும், ஜோதிஷ் ஷங்கர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் ஷஃபிக் முகமது அலி எடிட்டராகவும் கிறிஸ்டோ சேவியரிடர் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். படத்திற்கு டி.டி.ராமகிருஷ்ணன் வசனம் எழுத, ரோனெக்ஸ் சேவியரின் ஒப்பனை மற்றும் மெல்வி ஜே ஆடைகளையும் கவனித்துள்ளனர்.

 

Bramayugam

 

திகில் மற்றும் திரில்லர் படங்களை தயாரிப்பதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும்’பிரமயுகம்’ திரைப்படத்தை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார்.

 

இந்த நிலையில், ‘பிரமயுகம்’ படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது பின்னணி வேலைகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழு, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Related News

9306

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!
Tuesday March-04 2025

நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...

Recent Gallery