Latest News :

’லியோ’ படம் மூலம் ஊழியர்களை உற்சாகப்பத்திய ரூஃப்வெஸ்ட் !
Sunday October-22 2023

கட்டுமானத்துறையில் சுமார் 33 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக பயணித்து வரும் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்களை உருவாக்கி கொடுத்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் கட்டிய வில்லாக்களுக்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு, இந்நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் விரைவில் விற்பனையாகி விடுகிறது.

 

மேலும், நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நினைவாக்கும் விதத்தில் சென்னை சுற்றுவட்டாரத்தில் குறைந்த விலையில் ’ஒன் ஸ்கொயர்’ (One Square) என்ற பெயரில் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் கட்டி வரும் அடுக்குமாடி குடியிருப்பு

மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால் மேல்தட்டு மக்களிடம் மட்டும் இன்றி நடுத்தர மக்களிடமும் இந்நிறுவனம் நம்பிக்கையை பெற்றுள்ளது.

 

சென்னை தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தங்களது வெற்றிகரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மூலம் தமிழகத்தின் நம்பிக்கைக்குரிய கட்டுமான நிறுவனமாக திகழும் ரூஃப்வெஸ்ட், தற்போது தமிழகத்தை கடந்து ஆந்திராவின் தடா உள்ளிட்ட தமிழகத்தை ஒட்டியுள்ள பிற மாநிலங்களிலும் கால்பதிக்க உள்ளது.

 

ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் இத்தகைய வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அந்நிறுவன ஊழியர்களை கெளரவிக்கும் விதத்தில், அவர்களை மகிழ்விக்க முடிவு செய்த நிறுவனத்தின் சி.இ.ஓ  ஷாம் அவர்கள், ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் வழக்கமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்களோடு, அவர்களை சர்ப்பிரைஸ்ப்படுத்தும் விதமாக, ஊழியர்கள் மற்றும் குடும்பத்தாரை சமீபத்தில் வெளியான விஜயின் ‘லியோ’ திரைப்படத்தை பார்க்க வைத்துள்ளார்.

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், திரிஷா நடிப்பில் மிகப்பெரிய் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லியோ’ திரைப்படத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க விரும்புகிறார்கள். குறிப்பாக, விடுமுறை நாட்களில், டிக்கெட் கிடைக்காத நிலையில், தங்களது ஊழியர்களின் விருப்பம் அறிந்து அவர்களுக்கே தெரியாமல், இத்தகைய ஏற்பாட்டை ரூஃப்வெஸ்ட் நிறுவனம் செய்திருக்கிறது. அந்த வகையில், ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் அவர்களது குடும்பத்துடன் விஜயின் ‘லியோ’ திரைப்படத்தை பார்க்க வைத்து உற்சாகப்படுத்தியுள்ளனர். 

 

Roofwest

 

ஒரு திரைப்படம் பார்ப்பது சாதாரணமான நிகழ்வாக இருந்தாலும், தற்போதைய விடுமுறை நாளில், இதுபோன்ற ஒரு நிகழ்வை உருவாக்கி கொடுத்து ஊழியர்களை உற்சாகப்படுத்தியிருக்கும் ரூஃப்வெஸ்ட் நிறுவனம், எதிர்காலத்தில் ஊழியர்களுக்காக பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறது. 

 

அந்த திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ள ரூஃப்வெஸ்ட், தங்களது தரத்தால் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவது போல், தங்களது ஊழியர்களையும் குஷிப்படுத்துவதை தங்களது நோக்கமாக கொண்டு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

9310

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!
Tuesday March-04 2025

நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...

Recent Gallery