Latest News :

தென்னிந்திய சினிமாவை தலைநிமிர செய்த பிரபாஸின் பிறந்தநாள் கொண்டாட்டம்!
Monday October-23 2023

இந்திய சினிமா என்றாலே பாலுவுட் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தனது ‘பாகுபலி’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை இந்திய சினிமாவின் அடையாளமாக மாற்றிய நாயகன் பிரபாஸ். தெலுங்கு ரசிகர்களால் ரெபல் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வந்த பிரபாஸ் ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு ஒட்டு மொத்திய இந்திய சினிமா ரசிகர்களால் இந்தியன் ஸ்டார் என்று அழைக்கப்படுவதோடு, இந்திய சினிமாவை உலகளவில் மிகப்பெரிய வியாபாரம் மிக்க சினிமாவாக மாற்றியவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

 

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த பிரபாஸ், அப்படங்களுக்கு பிறகு நடிக்கும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களாக இருப்பதோடு, ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களுக்கு சவால் விடும் படங்களாகவும் உள்ளது. அந்த வகையில், ‘கே.ஜி.எப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் மீது உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், இன்று நடிகர் பிரபாஸ் தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்கள் மட்டும் இன்றி இந்திய திரையுலகமே அவருடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. இதற்கிடையே, பிரபாஸின் வானுயர கட் அவுட் அவைத்து ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ‘சலார்’ படக்குழுவும் பிரபாஸின் பிரத்யேக எமோஜை வெளியிட்டு அவரை கெளரவித்துள்ளது.

 

தென்னிந்திய சினிமாவை உலகளவில் வியாபாரம் மிக்கதாக உயர்த்திய நடிகர் பிரபாஸின் இந்த வருட பிறந்தநாளை மிகப்பெரிய கொண்டாட்டமாக மாற்றும் வகையில் மிகப்பெரிய பிரமாண்ட ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ’சலார்’ வரும் டிசம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

9311

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!
Tuesday March-04 2025

நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...

Recent Gallery