பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தனுஷை வைத்து இயக்கிய ‘வி.ஐ.பி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் தனுஷை வைத்து ‘தங்கமகன்’ என்ற படத்தை இயக்கினார். அப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும், பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராகவும் ஜொலிக்கும் வேல்ராஜ், ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் நடிப்பு என்று மூன்று பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறார்.
இந்த நிலையில், சசிகுமாரை நாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்கப் போகும் வேல்ராஜ், அதன் ஆரம்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘மெர்லின்’, ‘அசுரகுரு’, ‘சிங்கப்பெண்ணே’, ‘ஜி.எஸ்.டி’ போன்ற பல வெற்றி படங்களை தயாரித்திருக்கும் ஜே.எஸ்.பி.சதிஷ்குமார், தனது ஜி.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.
மிக பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் இப்படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை தயாரிப்பு தரப்பு விரைவில் அறிவிக்க உள்ளது.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...