Latest News :

பெட்ரோல் வெடிகுண்டு வீசும் ஜீ.வி.பிரகாஷ் குமார்! - கவனம் ஈர்க்கும் ‘ரெபல்’ முதல் பார்வை போஸ்டர்
Thursday October-26 2023

அறிமுக இயக்குநர் நிகேஷ்.ஆர்.எஸ் இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் படம் ‘ரெபல்’. இதில் நாயகியாக மமிதா பைஜூ நடிக்க, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

பல பிரமாண்ட திரைப்படங்களை தயாரித்து வரும் கே.ஈ.ஞானவேல்ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ள நிலையில், இன்று படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனனை நடிகர் சிலம்பரசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

படத்தின் நாயகன் ஜீ.வி.பிரகாஷ் குமார் போராட்டக்களத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசுவது போன்ற புகைப்படத்துடன் இருக்கும் ‘ரெபல்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு, சமூக வலைதளம் மற்றும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

படம் குறித்து இயக்குநர் நிகேஷ்.ஆர்.எஸ் பேசுகையில், “1980களில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் கதை, கல்லூரியை களமாக கொண்டிருக்கிறது. இப்படத்தில்  கல்லூரி மாணவர்களுக்கான அரசியலும் பேசப்பட்டிருக்கிறது. ஜீ.வி. பிரகாஷ் குமாரின் திரையுலக பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும்” என்றார்.

 

Rebel First Look

 

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கிருஷ்ணன் படத்தொகுப்பு செய்ய, கலை இயக்கத்தை உதயா கவனிக்கிறார். சக்தி சரவணன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

உண்மை சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்படம் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Related News

9317

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery