சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் 'சூரரைப் போற்று' திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும் ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
'சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் ஐந்து தேசிய விருதுகளை வென்ற கூட்டணி மீண்டும் 'சூர்யா 43' படத்தில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
சூர்யா -சுதா கொங்கரா - ஜீ.வி. பிரகாஷ் குமார் என தேசிய விருது பெற்ற கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால், 'சூர்யா 43' திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு, அறிவிப்பு வெளியான நிலையிலேயே அதிகரித்திருக்கிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...