பாலா இயக்கத்தில், வெற்றி பெற்ற தெலுங்குப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ தமிழ் ரீமேக் மூலம் ஹீரோவாக களம் இறங்க உள்ள நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரமுக்கு ஜோடியாக, ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் சூர்யாவின் மகள் வேடத்தில் நடித்த ஷ்ரியா ஷர்மா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல வருட போராட்டத்திற்கு பிறகு 1999ஆம் ஆண்டு வெளியான ‘சேது’ மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்த விக்ரம், தனது மகன் துருவ் விக்ரமை ஹீரோவாக களம் இறக்குகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முழுக்க முழுக்க புதுமுகங்களின் பங்களிப்பில், குறைந்த முதலீட்டில் வெளியாகி, தென் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தன் துருவ் நடிக்கிறார். இப்படத்தை சேது படத்தின் மூலம் விக்ரமுக்கு வாழ்க்கை கொடுத்த பாலா இயக்குகிறார்.
இதற்கிடையே, இப்படத்தின் ஹீரோயின் தேர்வை தொடங்கியுள்ள படக்குழுவினர் ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு மகளாக நடித்த ஷ்ரியா ஷர்மாவை நடிக்க வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனும் இப்படத்திற்கான ஹீரோயின் தேர்வு பட்டியலில் இருக்கிறாராம்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...
இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'கரவாலி'...
இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது...