‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘தங்கலான்’ ஆகிய படங்களின் அறிவிப்புகளால் விக்ரம் ரசிகர்கள் கொண்டாட்ட நிலையில் இருக்க மேலும் அவர்களை குஷிப்படுத்தும் விதமாக விக்ரமின் 62 வது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ மற்றும் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சித்தா’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார். விக்ரமின் 62 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ஹெச்.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு தற்காலிக தலைப்பாக ‘சியான் 62’ என்று வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். அது குறித்த விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...