பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு மக்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பால் அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது. அதிலும் ஓவியா தான் டாப் லெவலில் இருக்கிறார்.
இதற்கிடையே, பிக் பாஸ் வீட்டில் ஓவியா மற்றும் ஜூலி இடையே நடைபெற்ற மோதலால், ஓவியா ரசிகர்கள் ஜூலியை கடுமையாக விமர்சனம் செய்தனர். தற்போது போட்டி முடிவடைந்து, போட்டியாளர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், ஓவியா ரசிகர்கள் ஜூலியை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலியை ஓவியா ரசிர்கள் பேச விடாமல், ஓவியா...ஓவியா...என்று கூச்சலிட்டு அவரை மேடையில் இருந்து இறக்கினார்கள். இது பெரும் பரபரப்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இதையடுத்து, “ஜூலியை யாரும் அவமானப்படுத்த வேண்டாம், அவர் ரொம்ப பாவம்” என்று ஓவியா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஓவியா குறித்து பேசிய ஜூலி, “ஓவியாவிற்கு கிடைக்கும் புகழுக்கு அவர் தகுதியற்றவர். அவரது ரசிகர்களை அவர் மதிப்பதே இல்லை.” என்று கூறியிருக்கிறார்.
மீண்டும் ஓவியாவை சீண்டும் விதமாக ஜூலி பேட்டியில் பேசியிருப்பது ஓவிய ரசிகர்களை மேலும் கோபமடைய செய்துள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...
இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'கரவாலி'...
இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது...