Latest News :

செந்தில் கதையின் நாயகனாக நடிக்கும் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ படப்பிடிப்பு முடிவடைந்தது!
Tuesday November-07 2023

ராக் & ரோல் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஏ.பி.புரோடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் யாஷ்மின் பேகம் மற்றும் மணிமேகலை லட்சுமண் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’. இதில் நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். சுந்தர் மஹாஸ்ரீ நாயகனாக நடிக்கிறார். சந்தியா ராமசுப்பிரமணியன், அபினய ஸ்ரீ இருவரும் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். வில்லியாக நதியா வெங்கட் நடிக்கிறார். பிரபு, சன்னி பாபு ஹீரோ நண்பர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.

 

சுந்தர் மஹாஸ்ரீ கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் இப்படத்தை ராஜ் கண்ணாயிரம் இயக்கியிருக்கிறார். வெங்கட் முனிரத்னம், ஏ.சி.மணிகண்டன், ஸ்ரீநாத் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, ஜோஸப் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ரமேஷ் மணி படத்தொகுப்பு செய்ய, ராஜ் கிரண், மாதவன், விஷ்ணு ராஜ் ஆகியோர் நடனக் காட்சிகளை வடிவமைக்கின்றனர். ஒலி வடிவமைப்பு சதீஷ் சாந்திவாசன் நடிக்க, பத்திரிக்கை தொடர்பாளராக பா.சிவக்குமார் பணியாற்றுகிறார்.

 

Vaanganna Vanakanganna

 

இந்தப் படம் ஒரே நாளில்  நடக்கும் கதையில் உருவாகிறது. முழுக்க முழுக்க காமெடியில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன.

 

ஓரு எம்.எல்.ஏ.வுக்கும், ஓரு யூ டியூபருக்கும் இடையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டு எம்.எல்.ஏ.வின் கோபத்துக்கு ஆளாகிறார் யூ டியூபர். இந்தப்  பிரச்சனையில் இருந்து இருபத்தி நாலு மணிநேரத்திற்குள் அந்த யூ டியூபர் தப்பினாரா.. இல்லையா..  என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இருபது நாட்களுக்குள் இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

Related News

9333

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery