அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் ‘சைரன்’. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க, காவல்துறை அதிகாரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கும் இப்படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெறுள்ளது. சிறை கைதியான ஜெயம் ரவி, சிறையில் இருந்து பரோலில் வருகிறார், எதற்காக வருகிறார், என்ன செய்யப் போகிறார், என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள டீசரில், “நீங்க நல்லவனை நல்லவனா நடிக்க வச்சிட்டீங்களே” என்ற வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் டீசர் வெளியிடுவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ், “கதை காஞ்சிபுரத்தில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் ஜெயம் ரவிக்கும் கீர்த்தி சுரேஷ் ஜோடி இல்லை, அனுபமா பரமேஸ்வரன் தான் ஜோடி. இதுவரை போலீஸ் வேடத்தில் நடிக்காத நடிகையை போலீஸாக நடிக்க வேண்டும் என்று நினைத்தோம், அதனால் தான் கீர்த்தி சுரேஷை போலீஸ் வேடத்தில் நடிக்க வைத்தோம்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் தற்போது வெளியாகியிருக்கும் டீசர் வரை படம் சார்ந்த ஒவ்வொரு விசயத்தையும் வெளிப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் தான், சிறையில் இருந்து பரோலில் வரும் கைது என்ன செய்யப்போகிறார், என்பதை இந்த டீசர் சொல்கிறது. அடுத்ததாக டிரைலரை வெளியிடும் போது, கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதை சொல்வோம்.” என்றார்.
மேலும், தமிழ் திரையுலகில், தனித்துவமான ரசனைமிக்க படங்கள் மூலம், தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி. தொடர் வெற்றிப்படங்களாகத் தந்து வரும் ஜெயம் ரவியின் தன் திரை வாழ்க்கையில், முதல் முறையாக சைரன் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றுவது இப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் ’சைரன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...