நடிகர் கமல்ஹாசன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் போட்டியாளர்கள் தீபாவளி கொண்டாடுவது போன்ற நிகழ்ச்சி ஒன்றை விஜய் டிவி படம் பிடித்து வருகின்றது. இதில் கமல்ஹாசனும் பங்கேற்கிறார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அரசியல் குறித்து கமல்ஹாசனிடம் கருத்து கேட்க நேற்று ஊடகங்கள் சென்றிருந்த போது, அவர் வரவில்லை. இதனால் காத்திருந்த ஊடகங்கள் கமல்ஹாசனின் அலுவலகத்திற்கு சென்றார்கள். அப்போது அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இந்த தகவல் வைரலாக பரவியதை தொடர்ந்து கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், கமல் தரப்பில் இது மறுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அவர் காய்ச்சலால் பாதிக்கபட்டிருப்பது உண்மை தான். ஆனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை என்றும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதோடு, காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளதாகவும், தொண்டை புன் காரணமாக அவர் பேச சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஓய்வில் இருக்கும் கமல் சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விடுவார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...
இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'கரவாலி'...
இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது...