ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் படம் ‘லால் சலாம்’. இதில் விக்ராந்த் மற்றும் விஷ்னு விஷால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படம் பொங்களுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதே நாளில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படமும் வெளியாக இருப்பதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதலில், டிசம்பர் 15 ஆம் தேதி தான் ‘கேப்டன் மில்லர்’ வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், திடீரென்று பொங்கல் வெளியீடாக வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளனர். ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் இடையே பிரச்சனை இருப்பதால் தான், தனுஷ் தனது படத்தை ‘லால் சலாம்’ படத்திற்கு போட்டியாக பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக சொல்லப்பட்டு வந்தது.
ஆனால், உண்மை என்னவென்றால், பொங்கலுக்கு படத்தை வெளியிட்டால் வியாபாரம் மற்றும் வசூல் இரண்டுமே பெரிதாக இருக்கும் என்று தயாரிப்பு தரப்பு முடிவு செய்து அதன்படி பொங்கலுக்கு படத்தை வெளியிட வேண்டும் என்று கூறினார்களாம். ஆனால், தனுஷ் இதற்கு சம்மதிக்கவில்லையாம். பிறகு ‘லால் சலாம்’ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக பிரச்சனையில் சிக்கியுள்ளதால் அப்படம் அறிவித்தபடி பொங்கலுக்கு வெளியாகது என்று சொல்லப்பட்டதாம். அந்த தகவலை பலமுறை விசாரித்த தனுஷ், அது உண்மை என்று தெரிந்த உடன் தான் ‘கேப்டன் மில்லர்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட சம்மதித்தாராம்.
ரஜினி படம் என்பதால் தொழில்நுட்ப சிக்கல்கள் விரைவில் சரி செய்யப்படும் என்ற மற்றொரு தகவல் வெளியானாலும், சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட தனுஷ் தனது படத்தை பொங்கல் வெளியீடாக மாற்றியது தான் சரி என்று திரைப்பட வியாபாரம் தொடர்பானவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...