’காலா’ திரைப்படத்தின் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்த நடிகை ஈஸ்வரி ராவ், முதன்மை கதபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘ஆலகாலம்’. ஜெயகி மற்றும் சாந்தினி நாயகன், நாயகியாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தீபா, தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ஜெயகி இயக்கியிருக்கிறார். சமூகத்தின் மிகப்பெரும் பிரச்சனைகளையும், உண்மைச் சம்பவங்களையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள எதார்த்த படைப்பான இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், ‘ஆலகாலம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. முதல் பார்வை போஸ்டர் தனித்துவமாக இருப்பதோடு, வித்தியாசமான திரை அனுபவத்தை அளிக்கும் படமாக இருக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை, சமூகத்தால் சீரழிய அவனை மீட்க அவனது தாயும், காதலியும் போராடுகிறார்கள். அந்த இளைஞன் மீண்டானா?, வாழ்வில் ஜெயித்தானா?, தாயின் கனவு நிறைவேறியதா? என்ற ரீதியில் பயணிக்கும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ் தாயாக நடித்திருக்கிறார்.
கே.சத்யராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். எம்.யு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்ய, தெவேந்திரன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். பாபா பாஸ்கர் மற்றும் அசார் நடனக் காட்சிகளை வடிவமைக்க, ராம்குமார் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...