இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், ஜெய் நடிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் ‘லேபில்’ இணையத் தொடரில் முக்கிய வேடத்தில் புதுமுக நடிகர் ஹரிஷங்கர் நடித்திருக்கீறார்.
இளம் நடிகராக வலம் வரும் ஹரிஷங்கர், ஒரு கிரிக்கெட்டராக தன் வாழ்வைத் தொடங்கியவர். அண்டர் 19 பிரிவில் ஜீனியர் தேசிய போட்டிகளில் விளையாடிப் புகழ் பெற்றதோடு, கிரிக்கெட் பகுப்பாய்பவராகவும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியில், பல போட்டிகளில் பணிபுரிந்துள்ளார். சச்சின் விளையாடிய இறுதிப்போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் மும்பை அணிக்குச் சிறப்பான பகுப்பாய்வாளராக பணியாற்றியுள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாட்டு பகுப்பாய்வாளராக பணியாற்றியுள்ளார்.
விளையாட்டுத் துறையில் வெற்றிகரமாக வலம் வந்தவர், தொலைக்காட்சி தொடர்கள் மூலம் நடிகராக அறிமுகமாகி பிரபலமடைந்தார். கலர்ஸ் தொலைக்காட்சியின் ’அம்மன்’, ’மாங்கல்ய சபதம்’ , விஜய் தொலைக்காட்சியின் ’காற்றுக்கென்ன வேலி’ தொடர்களில் நடித்தார். பின்னர் சினிமாவிற்காக தன்னை முழுதாக 2 வருடங்கள் தயார் செய்து கொண்டவர், ’மாயத்திரை’, ’டிரைவர் ஜமுனா’, ’பட்டாம்பூச்சி’ போன்ற படங்களில் துணைக்காகப்பாத்திரங்களில் நடித்தார்.
இந்த நிலையில், ’லேபில்’ தொடரில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ஹரிஷங்கரின் நடிப்பை ஊடகங்கள் வெகுவாக பாராட்டியிருப்பதோடு, ரசிகர்கள் மட்டும் இன்றி திரைத்துறையினரின் கவனத்தையும் அவர் ஈர்த்துள்ளார். இதனால் அவருக்கு பல திரை வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
இது குறித்து நடிகர் ஷரிஷங்கர் கூறுகையில், “படிக்கும் காலத்திலிருந்தே நடிப்பு மீது எனக்கு தீராத ஆர்வம் இருந்தது. விளையாட்டில் சிறப்பாகச் செயல்பட்டதால் அதில் கிடைத்த வாய்ப்புகளை முழுக்க பயன்படுத்திக் கொண்டேன். கிரிக்கெட் நம் எதிர்காலம் இல்லை, அனலிஸ்டாக எனக்கு சரியான சப்போர்ட் கிடைக்கவில்லை, என்று உணர்ந்த போது, உடனடியாக என் ஆர்வம் முழுவதையும் திரைத்துறை பக்கம் செலுத்தினேன். ஸ்போர்ட்ஸில் எனக்கு கிடைக்காத ஆதரவு திரைத்துறையிலிருந்து முழுதாக கிடைத்தது. தொலைக்காட்சியில் என் நடிப்பை ஆரம்பித்தாலும், சினிமா என் கனவாக இருந்தது. லேபில் சீரிஸ் என் கனவை நனவாக்கியுள்ளது. கிரிக்கெட் மூலம் அறிமுகமான நண்பர் அருண்ராஜா காமராஜ் அவர்கள் என் ஆர்வத்தைப் பார்த்து லேபில் சீரிஸில் வாய்ப்புத் தந்தார். சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்குப் பிறகு, லேபில் சீரிஸ் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தயாரிப்பாளர் பிரபாகரன் அவர்கள் ஆரம்பம் முதலே எனக்குப் பெரிதும் ஊக்கம் தந்தார். இப்போது சீரிஸ் பார்த்து விட்டு அனைவரும் பாராட்டுவது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் நான் நடித்த காட்சிகளை தனித்தனியாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார். இப்போது பலரிடமிருந்து பாராட்டுகளோடு, வாய்ப்புகளும் வருகிறது. அடுத்ததாக நல்ல கதாபாத்திரங்களில் மிகச்சிறந்த நடிகராக பாராட்டுக்கள் பெற வேண்டும், வித்தியாசமான வில்லன் வேடங்களில் கலக்க வேண்டும், அதை நோக்கியே என் பயணம் இருக்கும்.” என்றார்.
தொடர்ந்து பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் ஹரிஷங்கருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகளும் வருகிறதாம். இருந்தாலும், கதாநாயகனாக நடிப்பதோடு, தொடர்ந்து நல்ல நல்ல வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்பது தான் தனது ஆசை, என்று கூறுபவரை விரைவில் பல நல்ல கதாபாத்திரங்களில் காணலாம்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...