‘ஜவான்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஷாருக்கானின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘டங்கி’. ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான “லுட் புட் கயே...” வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருப்பதோடு, பாடல் காட்சியில் ஷாருக்கான் இளமையாகவும், துள்ளலாக நடித்திருப்பதும் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், ‘ஆஸ்க் எஸ்.ஆர்.கே’ என்ற தலைப்பில் ரசிகர்களுடன் நேரலையில் நடிகர் ஷாருக்கான் பேசும் நிகழ்ச்சியில் அப்பாடல் குறித்தும், ஷாருக்கானின் இளமை ரகசியம் குறித்தும் ரசிகர்கள் கேள்விகள் கேட்க, அதற்கு ஷாருக் ஜாலியாக பதில் தெரிவித்துள்ளார்.
லுட் புட் கயே எங்கள் மனதை திருடி விட்டது, இது போல் டங்கியில் அரிஜித்தின் ரொமான்ஸ் பாடல் ஏதும் உள்ளதா? என்று கேட்டதற்கு, “இதற்கு பதிலளித்த ஷாருக்கான், “லுட் புட் கயா வந்துவிட்டது வருகிறது வருகிறது காதல் பாடல் பின்னால் வருகிறது. அதுவரை இந்த அழகான ரொமான்ஸில் ராஜ்குமார் ஹிரானி உங்களைக் காத்திருக்க வைப்பார். புதிய வருடத்தில் புதிய பாடலுடன் காதலும் வரும்.” என்றார்
இப்போது தான் லுட் புட் கயா பார்த்தேன், தெறிக்கும் மின்னல் வேகமும், எனர்ஜியுமாக குழந்தை போலான துள்ளலை 58 வயதில் எங்கிருந்து பெறுகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், “எனக்கு வீட்டில் ஒரு குழந்தை உள்ளது. அதனால் தான் அந்த அப்பாவித்தனத்தையும் ஆற்றலையும் பாடல்களில் வைக்க முயற்சிக்கிறேன்.” என்றார்.
அரிஜித் மற்றும் ப்ரீதம் கூட்டணியில் இந்தப் பாடல் பற்றி உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு, “அரிஜித் மற்றும் ப்ரீதம் ஆகியோர் பெரிய தாதா மற்றும் சிறிய தாதா போன்றவர்கள். ஒரு நடிகராகவும் நண்பராகவும் எனக்கு அவர்கள் உருவாக்கும் மாயாஜால பாடல்கள் எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...