Latest News :

இந்த வருடத்தின் வெற்றி படங்களின் பட்டியலில் ‘பார்க்கிங்’ நிச்சயம் இடம் பிடிக்கும் - இயக்குநர்கள் பாராட்டு
Sunday November-26 2023

அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பார்க்கிங்’. பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விளம்பர நிகழ்ச்சி நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், ரவிக்குமார், அருண்ராஜா காமராஜ், ரத்னகுமார், ரஞ்சித் ஜெயகொடி, கார்த்திக் யோகி, சண்முகம் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ், “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளை கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை டார்ச்சர் செய்துதான் அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவருக்கு நன்றி. நான் தனியாக படம் எடுக்க வேண்டும் என நினைத்தபோது உதவிய அருண் பாலாஜி, நந்தகுமார் இரண்டு பேருக்கும் நன்றி. நான் செய்த ‘பலூன்’ திரைப்படம் எனக்கு திருப்தியாக இல்லை. அந்த சமயத்தில் விஜய்சேதுபதி, திலீப் சுப்பராயன் என்னை தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க ஊக்குவித்தார்கள். அதன் பிறகு என்னை நம்பி யாருமே பணம் தரவில்லை. கேஜேஆர் சாரிடம் போய் படம் செய்யலாம் என்று சொன்னதும் அவர் உடனே சரி என்றார். அந்தப் படம் தான் ‘டிக்கிலோனா’. ஞானவேல் சாருக்கும் நன்றி. சந்தீப் கிஷன், அஞ்சலிக்கும் நன்றி. என் நண்பர்கள், குடும்பம், மனைவிக்கும் நன்றி.  ‘டிக்கிலோனா’ முடித்தப் பிறகு எனது அசிஸ்டெண்ட் ராம் வைத்து படம் செய்யலாம் என முடிவெடுத்தோம். ஹரிஷ் இந்தப் படத்திற்குள் வந்த பிறகுதான் இது பெரிய படமாக மாறியது. படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார்.

 

நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசுகையில், “ஒரு படம் ஜெயிப்பதும் தோற்பதும் மக்கள் கையில்தான் உள்ளது. ஆனால், அதற்கு முன்பு அப்படியான நல்ல படத்தை தவற விட்டிருந்தால் நிச்சயம் நான் வருத்தப்பட்டிருப்பேன். அப்படியான நல்ல கதையை எனக்குக் கொடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. உங்களுடைய படம் போல நினைத்து இந்தப் படம் மேல் நம்பிக்கை வைத்து மேடையில் பாராட்டிய இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு நெகட்டிவ் ஷேட் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு வில்லத்தனம் இருக்கும். அந்த வில்லத்தனத்திற்கு ஒரு ஹீரோயிசம் கொடுத்துதான் இயக்குநர் எழுதி இருக்கிறார். இந்த கேரக்டர் எனக்கு கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ’அபூர்வ ராகங்கள்’ ரஜினி சார், கமல் சாருடைய பல படங்கள், விஜய் சாருடைய ‘ப்ரியமுடன்’, அஜித் சாருடைய ‘வாலி’ போன்ற படங்களை ரசிகர்கள் கொண்டாடி ஹிட் கொடுத்துள்ளனர். அது ஏன் என்றால் அந்த கதாபாத்திரங்களில் உண்மை இருந்தது. எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ, வில்லத்தனம் இருக்கும். அது எப்படி, எந்த சூழலில் வெளிப்படுகிறது என்பதுதான் முக்கியம். அந்த ஸ்பேஸ் எனக்குக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. எம்.எஸ். பாஸ்கர், ரமா, பிரார்த்தனா, இந்துஜா என அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். படத்தில் நிறைய பாடல்கள் இல்லை. ஆனால், அதற்கும் சேர்த்து சாம் நல்ல பின்னணி இசை கொடுத்துள்ளார். நல்ல கதை கொடுத்துள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

 

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் படம் குறித்து பேசுகையில், “இந்தப் படத்திற்கு 100ஆவது நாள் விழா நடக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் எனக் கேட்ட இயக்குநர் ராம், சுதன் சார், ஸ்ரீனிஸ் அனைவருக்கும் நன்றி. இரண்டு வீடு ஒரு பார்க்கிங், இரண்டு வீட்டிலும் கார் இருக்கிறது எனும்போது நடக்கும் பிரச்சினைகள் தான் படம். அதை ரசிக்கும் விதமாக சொல்லியிருக்கும் ராம்குமார் பாலகிருஷ்ணனை பாராட்டுகிறேன். படத்தின் நாயகன் ஹரிஷ், இந்துஜா, பிரார்த்தனா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “இந்தப் படம் நான் முன்பே பார்த்துவிட்டேன். பார்க்கிங் என்ற விஷயத்தை வைத்து எவ்வளவு பெரிய பிரச்சினையைப் படம் பேச இருக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறீர்கள். ‘மாநாகரம்’ படத்தை ஸ்ரீனிஸ்தான் முதலில் தயாரிப்பதாக இருந்தது. இரண்டு கதாபாத்திரங்களின் ஈகோ கிளாஷ்தான் இந்தப் படமாக இருக்கும். எம்.எஸ். பாஸ்கர் சாருடன் வொர்க் பண்ண வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன். எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள். வாழ்த்துகள்.” என்றார்.

 

இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், “இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன். இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். பல இடங்களில் விறுவிறுப்பாகவும் சூடாகவும் இருக்கும். இயக்குநரின் முதல் படம் போல இருக்காது. நிச்சயம் நன்றாக இருக்கும். வாழ்த்துகள்.” என்றார்.

 

இயக்குநர் அருண்ராஜ் காமராஜா பேசுகையில், “படத்திற்கான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்பதையும் தாண்டி நண்பர்கள் ரீ யூனியன் போல இது உள்ளது. புது திறமைகளை கொண்டு வரும் ஸ்ரீனிஸூக்கு நன்றி. இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். இரண்டு பேருக்கும் இடையிலான ஈகோ கிளாஷ்தான் படம். எம்.எஸ். பாஸ்கர் சார் படத்தில் ஈவிலாக இருப்பார். ஹரிஷ் கல்யாண் வயலண்ட்டாக நடித்துள்ளார். எல்லோருக்கும் முன்பு இந்தப் படம் பார்த்ததில் மகிழ்ச்சி. எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். வாழ்த்துகள்.” என்றார்.

 

Parking

 

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் பேசுகையில், “இந்தப் பிரச்சினைக்களுக்காக எல்லாம் படம் எடுப்பீர்களா என நிறைய கமெண்ட்ஸ் இதன் டீசரில் பார்த்தேன். ஈகோதான் இங்கு பெரிய பிரச்சினை. படத்தில் வில்லன் பெரிதாக இருந்தால் படம் ஹிட்டாகும். அதுபோல, இந்தப் படத்தில் வில்லன் பெரிதாக இருக்கும். எளிய கதையை படம் முழுக்கக் கொண்டு போயிருக்கிறார்கள். இந்தப் படம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. இயக்குநருக்கு முதல் படத்தை விட இரண்டாவது படம் முக்கியமானது. அதனால், இயக்குநர் ராம் இரண்டாவது படத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஹரிஷ், எம்.எஸ். பாஸ்கர் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் நிச்சயம் வெற்றிப் பெறும். உங்களை படம் ஏமாற்றாது” என்றார். 

 

நடிகை இந்துஜா பேசுகையில், “இந்த அழகான படத்தைக் கொடுத்த இயக்குநர் ராமுக்கு நன்றி. எல்லோருடைய கதாபாத்திரங்களும் படம் பார்க்கும் உங்களுக்கு நிச்சயம் கனெக்ட் ஆகும். கர்ப்பமாக இருக்கும் மனைவி என்ற போது ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால், கதை கேட்டதும் இதில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். இதில் ஹரிஷ்- எம்.எஸ். பாஸ்கருடைய ஈகோ பிரச்சினை மட்டுமல்ல. பெண்களின் பார்வையிலும் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை காட்டும். படம் வெளிவருவதற்கு முன்பே படம் குறித்தான பாசிடிவ் டாக் ஆரம்பித்து விட்டது. ஹரிஷ் எப்போதும் பாசிட்டிவான நபர். இந்த நல்ல குணத்திற்காகவே அவர் பெரிய இடத்திற்குப் போக வேண்டும். அதற்கான ஆரம்பமாக ‘பார்க்கிங்’ அமைய வேண்டும். எம்.எஸ். பாஸ்கர் சார் லெஜெண்ட். அவருடன் நடிப்பது எனக்குப் பெருமை. நிறைய விஷயங்கள் அவரிடம் கற்றுக் கொண்டேன். செட்டில் கதைகள் எல்லாம் சொன்னார். பிரார்த்தனா, ரமா அம்மா என எல்லோருமே இயல்பாக நடித்துள்ளனர். பிலோமின்ராஜ், சாம் சி.எஸ். என அனைவருமே சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். இந்த நேர்த்தியான படத்தைக் காண்பிக்க ராமின் எழுத்து உதவியது. இந்த லைனை வைத்து ஒரு முழுநீளப் படம் கொடுத்ததற்கு நன்றி ராம். அவருடைய தெளிவினால்தான் நாங்களும் நம்பிக்கையோடு நடித்தோம். நல்ல படம் நடித்த நிறைவு உள்ளது. நன்றி.” என்றார்.

 

இயக்குநர் ராம் பேசுகையில், “எனது குடும்பத்திற்கு நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த ஸ்ரீனிஸ் சாருக்கும் என் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. அவர் எனது அண்ணன் போல. முதலில் இந்தப் படத்தின் கதை கேட்டதும் சுதன் சாருக்குப் பிடித்திருந்தது. இந்தப் படத்திற்காக என்னுடன் ஆரம்பத்தில் இருந்தே பயணித்த அனைவருக்கும் நன்றி. நம் எல்லோருக்கும் எதாவது ஒரு பேஷன் இருக்கும். அதை நோக்கிதான் பயணித்துக் கொண்டிருப்போம். அதையும் நம் குடும்பத்தையும் உடைக்கும்படி ஒரு பிரச்சினை வரும்போது நிச்சயம் நாம் கோபப்படுவோம். முதல் படத்தில் முடிந்தளவு பார்வையாளர்களுடன் இணைந்து இருக்கும்படியான கதை வேண்டும் என்பதால்தான் இதை எடுத்தேன். ஹீரோவாக இந்தக் கதையில் இருக்கும் முக்கியத்துவம் இன்னொரு கதாபாத்திரத்திற்கும் இருக்கும். அதை அப்படியே ஒத்துக் கொண்ட ஹரிஷ் அண்ணாவுக்கு நன்றி. எம்.எஸ். பாஸ்கர் போன்ற லெஜெண்ட்ரி நடிகரோடு வேலைப் பார்த்தது பெருமை. நிறைய விஷயங்களை எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தார். இந்துஜா, பிரார்த்தனா, ரமா என அனைவரும் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளனர். பிலோமின், சாம் சி.எஸ். என இந்தப் படத்தில் அமைந்த தொழில்நுட்ப அணி எனக்கு மிகப்பெரிய பலம். குடும்பத்தோடு பாருங்கள். பார்க்கிங் என்ற விஷயத்தில் இருந்து ஈகோ எப்படி வெடிக்கிறது என்பதைப் பார்ப்பீர்கள்” என்றார். 


Related News

9369

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...