‘மாநகரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனராஜ், ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ மற்றும் ‘லியோ’ என்று தொடர்ந்து வெற்றிப் படங்களை இயக்கிக் கொண்டிருப்பவர், தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குநராக வலம் வருகிறார். தற்போது ரஜினிகாந்தின் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
‘ஜி ஸ்குவாட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று அதிகராப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், “என்னுடைய நண்பர்களுக்கும், என்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலும், புதிய பாணிலான திரைப்பட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையிலும் படங்களை தயாரிக்கவே ஜி ஸ்குவாட் எனும் பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். என்னுடைய படைப்புகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருவதைப் போல்.. என்னுடைய பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாராகும் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அவருடைய இத்தகைய முயற்சிக்கு முன்னணி நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...