இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘டங்கி’ திரைப்படத்தில் இருந்து வெளியான “லுட் புட் கயா...” பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அப்படத்தின் மற்றொரு பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
மியூசிக்கல் மேஸ்ட்ரோ ப்ரீதமால் வடிவமைக்கப்பட்ட இந்த மெல்லிசைப் பாடல், முதலில் படத்தின் டங்கி டிராப் 1 வீடியோவில் அறிமுகமானது, அப்போதிலிருந்தே ஷாருக்கான் மற்றும் சோனு நிகாமின் கூட்டணியில் பார்வையாளர்கள் அப்பாடலை ஆவலுடன் எதிர்பார்த்து வந்தார்கள். பல ஆண்டுகளாக அழகான மெலோடிகளை, மறக்க முடியாத தருணங்களை உருவாக்கியதற்காக அறியப்பட்ட இந்தக்கூட்டணி, இந்த அற்புதமான "நிகில் தி கபி ஹம் கர் சே எனும் அழகான டிராக்கில் தங்கள் மாயாஜால எனர்ஜியை மீண்டும் உருவாக்கியுள்ளனர்.
இன்று வெளியிடப்பட்ட டங்கி டிராப் 3, இதயம் வருடும் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதையை வெளிநாட்டுக்க்கு செல்லும் தங்கள் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை, விவரிக்கிறது, தாய்நாட்டை பிரிந்து வாடும் ஏக்கத்தை, எதிர்காலத்தைத் தேடுவதில், தங்கள் வேர்களிலிருந்து பிரிந்தவர்களின் மனதின் வலியை பிரதிபலிக்கிறது.
நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டங்கி திரைப்படம் அன்பு மற்றும் நட்பின் பெருமையை விவரிக்கும் காவியமாகும், இது பெருமளவில் வேறுபட்ட மனிதர்களின் கதைகளை ஒன்றாக பின்னுகிறது, அந்த கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சவால்களை அதன் நகைச்சுவை பக்கத்தையும், அதற்கான இதயம் அதிரும் பதில்களையும் வழங்குகிறது. நிக்லே தி கபி ஹம் கர் சே என்ற இப்பாடல், ஹார்டி, மானு, புக்கு மற்றும் பல்லி ஆகியோர் திரைப்படத்தில் வாழ்க்கையை மாற்றும் பயணத்தைத் தொடங்கும்போது, தங்கள் வீட்டையும் அன்பானவர்களையும் பார்க்க ஏங்கும் அவர்கள் உணர்வுகளை, ஏக்கத்தை விவரிக்கிறது.
தொலைவில் இருப்பதன் வலியை இசையின் மூலம் வெளிப்படுத்தி, எல்லைகளைத் தாண்டி இதயங்களை இணைத்து, தங்கள் கனவுகளை நனவாக்கத் துணிந்தவர்களின் அசாதாரண பயணத்தை எதிரொலிக்கும் அந்த உலகத்திற்கு உங்களைக் கூட்டிச் செல்லும் இப்பாடல்.
ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட 'டங்கி' திரைப்படத்தில் நகைச்சுவை, இதயம் வருடும் அழகான அனுபவம் என மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது.
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பரில் வெளியாகிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...