சமூக சேவகர், கராத்தே வீரர் மற்றும் மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டு வீரர், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக வலம் வரும் பிரதீப் ஜோஸ்.கே, ‘கடிகார மனிதர்கள்’ என்ற திரைப்படத்தில் நகைச்சுவை கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அப்படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய அரன் இயக்கத்தில், ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜிகிரி தோஸ்த்’ என்ற படத்தில் கமாண்டராக பிரதீப் ஜோஸ் கலக்கியிருக்கிறார். பலம் வாய்ந்த இந்த கதாபாத்திரம் மூலம் பிரதீப் ஜோஷ் நிச்சயம் பாராட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இயக்குநர் இ.பிரகாஷ் இயக்கத்தில் சதீஷ், யோகி பாபு, பிக் பாஸ் டேனியல், தேவ் சிவகுமார் ஆகியோருடன் கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் பிரதீப் ஜோஷ், விரைவில் வெளியாக உள்ள இப்படங்களின் வெளியீட்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக உருவெடுப்பது உறுதி என்று படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகிறார்கள்.
சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் நடிப்பு மற்றும் தயாரிப்பு என இரண்டிலும் பிஸியாக செயல்பட்டு வரும் பிரதீப் ஜோஸ், அதே சமையம் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் பணியையும் தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கிறார். அதனால், தான் அவர் வசிக்கும் கோவை கவுண்டம்பாளையம் மற்றும் அதன் சுற்றியுள்ள மக்களின் நன்மதிப்பையும், அன்பையும் பெற்று அம்மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார்.
பிரதீப் ஜோஸின் சமூக சேவையைக்காக இவர் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...