‘கே.ஜி.எப்’ புகழ் ஹோம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி வரும் மற்றொரு பிரமாண்ட திரைப்படம் ‘சலார்’. இதில் நாயகனாக பிரபாஸ் நடிக்க, பிரித்விராஜ் சுகுமாரன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்ருதி ஹாசன், ஜெகதி பாபு, சிம்ஹா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படமும் பல பாகங்களாக உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி முதல் பாகத்திற்கு ‘சலார் : பாகம் 1 - சீஸ்ஃபயர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படம் குறித்து வெளியான தகவல்கள் மற்றும் ஒரு சில புகைப்படங்கள் மற்றும் டீசர் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், நாயகன் பிரபாஸும், பிரித்விராஜும் சிறு வயது முதலே நண்பர்களாக இருக்க, பிரித்விராஜுக்கு ஆபத்து வரும் நேரத்தில் அவரை காப்பற்ற மிகப்பெரிய படைகளை எதிர்த்து தனிமனித ராணுவமாக பிரபாஸ் சண்டையிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இதன் மூலம் இப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக மட்டும் இன்றி, நட்பை பற்றி பேசும் உணர்வுப்பூர்வமான படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘கே.ஜி.எப்’ படமும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்தவையாக இருந்தாலும், அதில் இருந்த அம்மா செண்டிமெண்ட் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதுபோல், ‘சலார்’ படத்தில் நட்பின் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நிறைந்திருப்பதோடு, படத்தின் மையமாக நகரக்கூடியதாக இருக்கும் என்று தெரிகிறது.
மேலும், ‘கே.ஜி.எப்’ படத்தில் எப்படி தங்க கோட்டையான ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை அடைய பலர் போட்டி போட்டார்களோ அதுபோல், ‘சலார்’ படத்திலும் ஒரு சாம்ராஜ்ய போட்டியை மையப்படுத்தி இயக்குநர் பிரசாந்த் நீல் கதை சொல்லியிருக்கிறார் என்பதை டிரைலர் உணர்த்துகிறது.
எது எப்படியோ, தனது ‘கே.ஜி.எப்’ படம் மூலம் மேக்கிங் மற்றும் சண்டைக்காட்சிகள் மூலம் இந்திய சினிமாவுக்கு புதிய உலகத்தைக் காட்ட்சிய இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ‘சலார்’ படம் மூலமாகவும் அதை மீண்டும் செய்வார்கள் என்பது டிரைலரில் தெரிகிறது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...