இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘டங்கி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், இதுவரை வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், படத்திற்கான சிறப்பு பாடல் ஒன்றை படமாக்க ‘டங்கி’ குழுவினர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தந்த தகவலின் படி , “ஷாரூக் மற்றும் ஹிரானி ஆகியோர், செவ்வாய் இரவு சுஹானாவின் படத்தின் பிரீமியரின் போது வெளியிடும்படி இப்பாடலை மூன்று நாட்களில் படமாக்கியுள்ளனர். மிகக்குறைந்த குழுவினருடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியின் புறநகர் பகுதிகளில் இப்பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஷாருக்கானிற்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் ஷாருக்கானின் பாடல் படப்பிடிப்பு பற்றிய செய்தி அவரது உள்ளூர் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்க, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை, அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர்.
ஷாருக்கானுடன் பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ‘டங்கி’ திரைப்படம் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...