Latest News :

மாறுபட்ட திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ’மதிமாறன்’! - கவனம் ஈர்க்கும் முதல் பார்வை போஸ்டர்
Sunday December-10 2023

அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், அறிமுக நடிகர் செங்குட்டுவன், ‘லவ் டுடே’ புகழ் இவானா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ‘மதிமாறன்’. ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

”புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே” என்ற உலகின் மிகச்சிறந்த பழமொழியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடலை விவரிக்கும்படி அமைந்துள்ளது.

 

பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.  பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் படமாக உருவாக்கியுள்ளார்  மந்த்ரா வீரபாண்டியன். 

 

தற்போது வெளியாகியுள்ள படத்தின் முதல் பார்வை போஸ்டர், படத்தின் முதன்மை கதாப்பாத்திரங்களுடன் ஒரு காவலதிகாரி வாகனம் மீது அமர்ந்திருக்கிறார்.  இந்த முதல் பார்வை படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதுடன், ரசிகர்களுக்கு ஒரு தரமான திரில்லர் அனுபவம் காத்திருப்பதாக உறுதியளிக்கிறது.

 

இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே  புகழ் இவானா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க வெங்கட் செங்குட்டுவன்  நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, இ.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் தற்போது திரைவெளியீட்டுக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

 

Mathimaran First Look Poster

 

பர்வேஸ்.கே ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்ய, வி.மாயபாண்டி கலை இயக்குநராக பணியாற்ற, சுரேஷ் குமார் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பு பணியை யுவராஜ் கவனிக்கிறார்.

 

விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மதிமாறன்’ படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை பாபின்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Related News

9392

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery