பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பிரமாண்டமான மறுபிரவேசமாக அமைந்துள்ள 2023 வருடத்தில் அவருடைய படங்கள் தொடர் வெற்றி பெறுவதோடு, வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் ‘பதான்’ மற்றும் செப்டம்பர் மாதம் ‘ஜவான்’ என இரண்டு மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்த ஷாருக்கான், இந்த வருடத்தின் கடைசி மாதமான டிசம்பரில் ‘டங்கி’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை மீண்டும் கொடுக்க இருக்கிறார்.
ராஜ்குமார் ஹிரானி எழுதி இயக்கியிருப்பதோடு, படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி, கௌரி கான் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
’ஜவான்’ வெற்றியை தொடர்ந்து ஷாருக்கானின் நடிப்பில் வெளியாக இருக்கும் இப்படத்தின் மீது இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படம் தொடர்பான தகவல்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வரும் டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘டங்கி’ திரைப்படத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளம் மாநிலங்களின் திரையரங்க வெளியீட்டு உரிமையை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதில், ட்ரீம் பிக் பிலிம்ஸ் நிறுவனமும் விநியோக பங்குதாரராக இணைந்துள்ளது.
‘ஜவான்’ படத்தை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிட்ட ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவன ‘டங்கி’ திரைப்படத்தின் மூலம் ஷாருக்கானுடன் இணைந்திருப்பதை பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...